5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ICC Champions Trophy 2025: பிசிபி – பிசிசிஐ இடையே ஒப்பந்தம்.. இந்திய அணியின் போட்டிகள் மாற்றம்.. எங்கு தெரியுமா?

India vs Pakistan: 2025 சாம்பியன் டிராபியில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தால் அந்த போட்டியும் துபாயில் நடைபெறும். அதேநேரத்தில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்தால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாது என்றும் தெரிகிறது.

ICC Champions Trophy 2025: பிசிபி – பிசிசிஐ இடையே ஒப்பந்தம்.. இந்திய அணியின் போட்டிகள் மாற்றம்.. எங்கு தெரியுமா?
சாம்பியன்ஸ் டிராபி (Image: pakistan cricket/ twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Nov 2024 15:03 PM

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து நாள்தோறும் கேள்விகள் எழுந்து வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது. இதனை அப்படியே ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்க, ஹைபிரிட் மாடலில் நடத்த மறுத்துவிட்டது. இதனால் வருகின்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடைபெறும் என்ற கேள்வி தொடர்கதையானது. இந்தநிலையில், சாம்பியன் டிராபியில் இந்திய அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் பதிலளித்துள்ளார்.

ALSO READ: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!

இந்திய அணி எங்கு விளையாடும்..?

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப், சாம்பியன் டிராபியில் இந்திய அணி விளையாடுவது குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “ 2025 சாம்பியன்ஸ் டிராபி 2025 ஹைப்ரிட் வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடையே ஏற்கனவே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, சாம்பியன்ஸ் டிராபியின் மற்ற அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும். ஆனால், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. அதன்படி, துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் அனைத்து போட்டிகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்:

ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபியை ஏற்பாடு செய்யும் உரிமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமே முழுமையாக கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு பிசிசிஐ மற்றும் மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய அணிக்கு எதிரான போட்டிகளுக்காக பாகிஸ்தான் உள்ளிட்ட சில அணிகள் சாம்பியன் டிராபியில் துபாய் சென்று விளையாட இருக்கிறது.

மேலும், போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 2025 சாம்பியன் டிராபியில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தால் அந்த போட்டியும் துபாயில் நடைபெறும். அதேநேரத்தில், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்தால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாது என்றும் தெரிகிறது.

சாம்பியன் டிராபி எப்போது..?

2025 சாம்பியன் டிராபி வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டியானது மார்ச் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. சாம்பியன் டிராபியின் தொடக்க போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டிகளுடன் கராச்சியில் தொடங்குகிறது. அதேநேரத்தில், பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியுடன் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் அடியெடுத்து வைக்கிறது.

ALSO READ: ICC Champion Trophy 2025: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுமா..? அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

சாம்பியன்ஸ் டிராபி அணிகள்:

குரூப்-ஏ

இந்தியா
பாகிஸ்தான்
வங்கதேசம்
நியூசிலாந்து

குரூப்-பி

ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
ஆப்கானிஸ்தான்

1996க்கு பிறகு..

1996 உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி போட்டி இதுவாகும். இந்த போட்டியை பாகிஸ்தானுடன், இந்தியாவும், இலங்கையும் நடத்தியது. இதற்குபிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் எந்தவொரு ஐசிசி போட்டிகளும் நடைபெறவில்லை.

கடந்த 2012ம் ஆண்டு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் எந்தவொரு இருதரப்பு தொடர்களிலும் விளையாடவில்லை. ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்குநேராக மோதி வருகின்றன. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் நடத்திய ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாட மறுத்தது. இதையடுத்து, ஹைபிரிட் மாடலில் இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது.

 

Latest News