IPL FANS : முடிவடைந்த ஐபிஎல்.. அடுத்து என்ன..? மீம்ஸ்களால் ஆறுதல் அடையும் ரசிகர்கள்..!

IPL 2024: ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கவலையில் ஆழ்ந்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும்  2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் நினைவுகளை ரசிகர்களுக்கு மீண்டும் அளித்து வருகின்றனர்.  இணையத்தில் ஐபிஎல் 2024 குறித்து தொடர்ந்து வெளிவரும் மீம்ஸ்கள் குறித்து காணலாம்

IPL FANS :  முடிவடைந்த ஐபிஎல்.. அடுத்து என்ன..? மீம்ஸ்களால் ஆறுதல் அடையும் ரசிகர்கள்..!

ஐபிஎல் மீம்ஸ்

Published: 

28 May 2024 18:40 PM

நடப்பு ஐபிஎல் 17 வது சீசன் கடந்த கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை, ஆசிய கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டிகளை காட்டிலும், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போதும் ரசிகர்களிடத்தில்வரவேற்பு அதிகளவில் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், மே 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சன்ரைசர்ச் ஐதரபாத் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு, 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Also Read: PM Modi : 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால், ஒருபுறம், தங்களுக்கு பிடித்த அணி என்பதை தாண்டி, ரசிகர்களும், திறமையான வீரர்களுக்கு, மற்ற அணிகளுக்கும் தங்களது ஆதரவை அளித்தனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மும்பை, சென்னை அணியின் ரசிகர்களுக்கு உலகபோர் அளவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால், மும்பை இந்தியன்ஸ் லீக் போட்டிகளில் முதல் அணியாக வெளியேறிய போது, நான் இல்லன்னா என் பங்காளி சிஎஸ்கே தான் டா கப்பு ஜெயிக்கனும் என்று மீம்ஸ்களை வெளியிட்டனர்.

 

அதேப்போல், ஆர்சிபி ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும் போது, ஏ சாலா கம் நம்தே என்று கூறிவரும் நிலையில், இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஆர்சிபி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. அதற்கும் நெட்டிசன்கள், சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருந்தால், இறுதிப்போட்டிக்காவது சென்றிருக்கும், ஆனால், நீ போன வேகத்தில் வந்திருக்க என்று விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டனர்.

ஐபிஎல் ரசிகர்கள் காலை எழுந்தது முதல், இரவு உறக்கத்திற்கு செல்வது வரையிலும், அன்றைக்கான போட்டி, புள்ளிப்பட்டியல், மேன் ஆஃப் தி மேட்ச், அடுத்த நாளுக்கான போட்டி என்று ரொம்ப பிஸியாக வாழ்ந்து வந்தனர். எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும், கோப்பையை வெல்லும் அணி எது என்று ரசிகர்களுக்குள்ளேயே மினி வேர்ல்ட் வார் நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஐபிஎல் தொடர் வரும் வரையிலும் இந்த தொடரில் நடந்த ஹைலைட் வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும், தங்களுக்கு பிடித்த வீரர்கள் மெகா ஆக்‌ஷனில் வேறு அணிக்கு சென்று விடுவார்களோ என்ற பயத்திலும் இருந்து வருகின்றனர். ஒரு புறம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளை வைத்து நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் விட்டுசென்ற நினைவுகளை, வெறுமையை தெளிவாக சித்தரித்து, ரசிகர்களின் ஆவலை நகைச்சுவையாக மீம்ஸ்கள் எடுத்துரைக்கிறது. இன்ஸ்டகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: Sunil Narine: சூப்பர் ஸ்டார் என்று சுனில் நரைனை பாராட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. காரணம் என்ன?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!