Cricket Rules: கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை.. சிக்ஸர் அடித்தால் அவுட்டாம்! - Tamil News | England, New Cricket Rules, Shoreham Cricket Club | TV9 Tamil

Cricket Rules: கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை.. சிக்ஸர் அடித்தால் அவுட்டாம்!

England: கிரிக்கெட் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் 90களின் காலக்கட்டத்துக்குப் பிறகே கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிக்க தொடங்கியது எனலாம். ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு வீரரும் ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தனர். இத்தகைய கிரிக்கெட்டுக்கென தனி விதிகளும் வகுக்கப்பட்டு அவ்வப்போது மாற்றப்பட்டும் வருகிறது. 

Cricket Rules: கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை.. சிக்ஸர் அடித்தால் அவுட்டாம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Jul 2024 11:31 AM

கிரிக்கெட்: இங்கிலாந்தின் பழமையான கிரிக்கெட் கிளப் ஒன்று, பேட்டர்கள் சிக்ஸர் அடிக்க தடை விதித்துள்ள செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது. உலகம் முழுவதுல் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு வந்த சோதனை என்னவென்று பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் 234 ஆண்டுகள் பழமை வாய்ந்த சௌத்விக் அண்ட் ஷோரேஹம் என்ற உள்ளூர் கிரிக்கெட் கிளப் செயல்பட்டு வருகிறது. மேற்கு சசெக்ஸில் உள்ள கிரிக்கெட் கிளப்புக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் மிகச்சிறியது. இதனால் யாராக இருந்தாலும் பந்து சிக்ஸருக்கு பறப்பது நிச்சயம் தான்.ஆனால் இந்த விஷயத்தில் தான் மிகப்பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சுற்றி ஏகப்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Also Read: Gold Price : தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா? எவ்வளவு வரை எதிர்பார்க்கலாம்? நிபுணர்கள் கணிப்பு இதுதான்!

இப்படியிருக்கையில் கிளப் மைதானத்தில் வீரர்களால் அடிக்கப்படும் சிக்ஸர்கள் தங்கள் ஜன்னல்கள், கார்கள் மற்றும் வீடுகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருவதாக குடியிருப்புவாசிகள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த கிரிக்கெட் கிளப் நிர்வாகத்தினர் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்தனர். அதன்படி இனிமேல் அங்கு கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் சிக்ஸர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த விதியில் முதலில் சிக்ஸர் அடித்தால் அதற்கு ரன் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது சிக்ஸர் அடித்தால் அவுட் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. சிக்ஸர் அடிக்க தடை விதித்த முடிவு கிளப் வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பந்தை சிக்ஸருக்கு அடிப்பது விளையாட்டின் பெருமையான ஒரு பகுதியாகும். அப்படியிருக்கையில் அதனை நீக்குவது வியப்புக்குரியதாக உள்ளதாக கிளப்பில் விளையாடும் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Also Read: Tenkasi Tour : குற்றாலம் மாதிரியே சூப்பரான அருவிகள்.. குடும்பத்துடன் சென்றுவர சுற்றுலா விவரம்!

கிண்டல் செய்யும் 90ஸ் கிட்ஸ்

கிரிக்கெட் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்தியாவில் 90களின் காலக்கட்டத்துக்குப் பிறகே கிரிக்கெட் மீதான மோகம் அதிகரிக்க தொடங்கியது எனலாம். ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு வீரரும் ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தனர். இந்தியா மட்டுமல்லாது கிரிக்கெட்டில் பங்குபெறும் கடைக்குட்டி அணி வரை அனைவரையும் நம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இத்தகைய கிரிக்கெட்டுக்கென தனி விதிகளும் வகுக்கப்பட்டு அவ்வப்போது மாற்றப்பட்டும் வருகிறது.

இப்படியிருக்கையில் நண்பர்களுடன் நாம் கிரிக்கெட் விளையாடும்போது ஏகப்பட்ட விதிகள் மாற்றப்படும். தொடர்ந்து 3 முறை பந்தை அடிக்காமல் விட்டால் அவுட், சுவற்றில் பந்து பட்டு கேட்ச் பிடித்தால் அவுட், இரு அணிக்கும் பொதுவான வீரராக விளையாடுபவருக்கு இரண்டு பேட்டிங், பந்தை தரையில் ஒருமுறை பட்டு பிடித்தால் அவுட், சிக்ஸர் அடித்தால் அவுட்  என ஏகப்பட்ட விதிகளை இஷ்டத்துக்கு வகுத்து நாம் நண்பர்களுடன் மகிழ்ந்தது தான் நியாபகம் வருவதாக கிரிக்கெட் கிளப் நடவடிக்கையை பார்த்த 90ஸ் கிட்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?