Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!
24H Dubai 2025: கடந்த 1990ம் ஆண்டு இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் தனது 18 வயதில் பங்கேற்றார். 110சிசி மோட்டார் பைக்குகள் மீது ஆர்வம் கொண்டு, 2002ம் ஆண்டு தேசிய ஃபார்முலா இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா தொடருக்கு முன்னேறினார்.
நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிகராகவும், கார் மற்றும் பைக் பந்தயங்களில் ரேஸராகவும் இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். நடிகர் அஜித் சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள சர்க்யூட் டி பார்சிலோனா கேடலூனியாவில் கார் பந்தய பயிற்சிக்கு பிறகு, அடுத்த கார் பந்தயத்திற்கு தயாராகிவிட்டார். அதன்படி, நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறவுள்ள 24H Dubai 2025 & The European 24H Series Championship ஆகிய கார் ரேஸில் பங்கேற்க உள்ளார். இந்த கார் பந்தயத்திற்கு தயாராகும் வகையில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் கார் பந்தயத்தில் பயன்படுத்தவுள்ள கார், ஹெல்மெட் ஆகியவற்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ பொறிக்கப்பட்ட காருடன் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் தலைமையிலான ரேஸ் டீம் பங்கேற்கிறது. 24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் திட்டத்துடன் களமிறங்கும் அஜித்குமார், பந்தயத்தில் மட்டுமல்லாமல் அணியின் உரிமையாளராகவும், தலைமையும் தாங்குகிறார். இதன்மூலம், அஜித்குமார் ரேஸிங் துபாயில் 992 வகுப்பில் போர்ஸ் 911 GT3 2கோப்பையுடன் தனது 24H தொடரில் அறிமுகமாக உள்ளார். இதை தொடர்ந்து, 2025ல் 242H Series ஐரோப்பிய பந்தயத்தில் முழு போட்டிகளிலும் பங்கேற்கிறார்.
Here’s the Much Awaited Video Of THALA AJITH’s Brand New Race Event Car For The 24H Series Dubai 🏎️💨
Porsche 992 GT3 Cup 💥#AjithkumarRacing | #GoodBadUgly | #Ajithkumar pic.twitter.com/1FCafWnRzm
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 27, 2024
ALSO READ: IPL 2025: ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை..! ஏன் தெரியுமா..?
கார் பந்தயத்தில் அஜித் பயன்படுத்தவுள்ள ரேஸ் கார்:
துபாயில் நடைபெறவுள்ள மிச்செலின் 24H பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் Porsche 992 GT3 என்ற ரேஸ் காரை பயன்படுத்த இருக்கிறார். இந்த ரேஸ் காரானது Porsche ரேஸிங் சீரிஸிஸ் கார் வகைகளில் உயர் ரக கார் வகையாகும். இந்த கார் மீது அஜித்குமார் ரேஸிங் என்ற முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. அஜித் பயன்படுத்தவுள்ள காரின் நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிற போர்ஷே GT3 RS காரின் மேல் மற்றும் பக்கவாட்டில் மஞ்சள் கோடுகள் உள்ளன. அஜித் சமீபத்தில் ஃபெராரி 488 EVO ரேஸ் காரில் துபாய் ஆட்டோட்ரோமில் பயிற்சி மேற்கொண்டார்.
அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது?
- ட்ராக் டேஸ் துபாய் ஆட்டோட்ரோம்: டிசம்பர் 17–18, 2024
- மிச்செலின் 24H துபாய்: ஜனவரி 10–12, 2025
- மிச்செலின் 6H அபுதாபி: ஜனவரி 18–19, 2025
போட்டியை எங்கு காணலாம்..?
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் பந்தய போட்டியை 24H SERIES YouTube, Servus TV On உள்ளிட்டவைகளில் நேரடியாக கண்டுகளிக்கலாம். இது முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே பார்க்க முடியும்.
அஜித்குமாரின் முந்தைய பந்தயங்கள்:
கடந்த 1990ம் ஆண்டு இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் தனது 18 வயதில் பங்கேற்றார். 110சிசி மோட்டார் பைக்குகள் மீது ஆர்வம் கொண்டு, 2002ம் ஆண்டு தேசிய ஃபார்முலா இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா தொடருக்கு முன்னேறினார். 2004ம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபார்முலா 3ன் ஸ்காலர்ஷிப் பங்கேற்று, இரண்டு போடியம் பினிஷிங்கை பெற்றார். தொடர்ந்து பலமுறை பிரிட்டிஷ் டூரிங் கார் சாம்பியன்ஷிப் பந்தய வெற்றியாளர் ஸ்டீபன் ஜெல்லியுடன் நேரடியாக போட்டியிட்டார்.
அதன்படி, ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து, நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அஜித்குமார், கடந்த 2010 FIA ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். 2025 மிச்செலின் 24H துபாய் பந்தயத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்குமார் முதல் அதிகாரப்பூர்வ பந்தயத்தில் பங்கேற்கிறார்.