5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Abhishek Nayar: ரோஹித் ஷர்மாவின் நண்பர்.. கம்பீரின் நம்பிக்கைக்குரியவர்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?

Abhishek Nayar Birthday: அபிஷேக் நாயருக்கு கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டு காலம் அனுபவம் உண்டு. ஹைதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத்தில் அபிஷேக் நாயர் பிறந்திருந்தாலும், முதல் தர போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கினார். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், வலது கையால் நடுத்த வேகத்தில் பந்தும்வீசுவார். அபிஷேக் நாயர் ரோஹித் சர்மாவை போன்று அதிபயங்கர சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர்.

Abhishek Nayar: ரோஹித் ஷர்மாவின் நண்பர்.. கம்பீரின் நம்பிக்கைக்குரியவர்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?
கவுதம் – கம்பீர் – அபிஷேக் சர்மா (Image: BCCI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 16 Oct 2024 12:41 PM

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் பிறந்தநாள் இன்று. ஒரு காலத்தில் ஐபிஎல்லில் மும்பை அணியின் பேட்ஸ்மேனாக தெரிய ஆரம்பித்து, தற்போது இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக உயர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கும் அபிஷேக் நாயருக்கு என்ன தொடர்பு? எப்படி இவர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக ஆனார்..? என்ற கேள்வி தோன்றினால் இந்த செய்தி தொகுப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: ICC Women’s T20 World Cup: தத்தளிக்கும் ஹர்மன்ப்ரீத் படை.. இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

அபிஷேக் நாயர்:

கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிறந்த அபிஷேக் நாயர், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2009ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அபிஷேக் நாயர், இதுவரை இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், மூன்று போட்டிகளிலும் அபிஷேக் நாயருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இவரது பெயரில் சர்வதேச ரன்கள் எதுவும் கிடையாது. மேலும், சர்வதேச போட்டிகளில் 3 ஓவர்கள் வீசியுள்ள அபிஷேக் நாயர் 18 பந்துகளை வீசி 17 ரன்களை விட்டுகொடுத்துள்ளார். ஒரு விக்கெட் கூட எடுத்தது கிடையாது.

அப்புறம் எப்படி இந்திய பயிற்சியாளர் குழுவில் இடம்..?

அபிஷேக் நாயரால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக வலம் வண்டுள்ளார். அபிஷேக் நாயர் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 103 போட்டிகளில் விளையாடி 5748 ரன்களுடன், 173 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேசமயம், லிஸ்ட் ஏவில் 99 போட்டிகளில் விளையாடி 2145 ரன்களுடன், 27 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் நாயர் 1291 ரன்களுடன் 27 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் அபிஷேக் நாயர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் சான்று என்றாலும், இவர் மற்றொரு விஷயத்திலும் நிபுணராக திகழ்ந்தார்.

கம்பீரின் நம்பிக்கைக்குரியவர் – ரோஹித்தின் நண்பர்:

அபிஷேக் நாயருக்கு கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டு காலம் அனுபவம் உண்டு. ஹைதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத்தில் அபிஷேக் நாயர் பிறந்திருந்தாலும், முதல் தர போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கினார். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், வலது கையால் நடுத்த வேகத்தில் பந்தும்வீசுவார். அபிஷேக் நாயர் ரோஹித் சர்மாவை போன்று அதிபயங்கர சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர். 2006ம் ஆண்டு ரஞ்சி கோப்பை மும்பை அணி சாம்பியன் ஆனதற்கு அபிஷேக் நாயரின் பங்கு முக்கியமானது. அபிஷேக் நாயரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறந்த நண்பர்கள்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். 2008ம் ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸால் அபிஷேக் நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்து கம்பீரின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அந்தவகையில், கம்பீரின் நம்பிக்கையும், ரோஹித் சர்மாவின் நட்பும் அபிஷேக் நாயருக்கு இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக மாற உதவி செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக ஆவதற்கு முன், அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அகாடமியின் தலைவராக ருந்தார். கேகேஆர் அணியின் முக்கிய நிர்வாகிகளில் இருவராக கருதப்படுகிறார். இதையடுத்து, இளம் வீரர்களுக்கும் கேகேஆர் அணி நிர்வாகத்தும் இடையே பாலமாக செயல்பட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த அபிஷேக் நாயர், அதன்பிறகு இளம் வீரர்களின் வழிகாட்டியாக செயல்பட்டார். கடந்த ஐபிஎல் 2024ல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்பட பல வீரர்கள் அபிஷேக் நாயரை புகழ்ந்து பேசினர்.

ALSO READ: Watch Video: ஆள் இல்லாமல் தவித்த தென்னாப்பிரிக்கா.. பீல்ட்டிங்கில் களம் இறங்கிய பேட்டிங் பயிற்சியாளர்!

அபிஷேக் நாயரின் மனைவி யார் தெரியுமா..?

அபிஷேக் நாயரின் மனைவி பெயர் நடாஷா ஷேக் ஆகும். இவர் ஒரு தொழில்முறை முடி மற்றும் ஒப்பனை கலைஞர் ஆவார். நடாஷா ஷேக் ஷேக் கேரேஜ் என்ற பெயரில் பார்லர் ஒன்றை நடத்தியுள்ளார். இவரது பார்லரில்தான் பல பாலிவுட் நடிகைகள் செல்கின்றனர். அபிஷேக் நாயருக்கு, நடாஷாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜீன் 7ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, இவர்கள் இருவரின் காதல் கதையும் சுவாரஸ்யமானது. முடி வெட்ட சென்ற அபிஷேக் நாயர், நடாஷாவை முதல்முறையாக பார்த்துள்ளார். அந்த சந்திப்பு நட்பாக உருவெடுத்து பின்னர் காதலாக மாறியது.

Latest News