ODI Century: ஒரு நாள் போட்டியில் பதிவாகாத சதம்.. 38 ஆண்டுகாலத்தில் முதல்முறை.. இந்திய அணி மோசமான சாதனை!
Indian Batsmans: கடந்த 38 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டு முழுவதும் எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதம் அடிக்காதது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 64 ரன்கள் எடுத்ததே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, 64 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இந்திய கிரிக்கெட் அணி: டி20 உலகக் கோப்பைக்கு வெற்றிக்கு பிறகு இந்திய அணி, இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றது. இருப்பினும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஒருநாள் அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய அணி ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகும் இந்திய அணி இனி அடுத்த ஆண்டே ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், இந்த தொடருக்கு பிறகும், இந்தாண்டு முழுவதும் எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் சதம் அடிக்கவில்லை. இதன் காரணமாக 38 ஆண்டுக்கு பிறகு மோசமான சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்தது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
38 ஆண்டுகளுக்கு பிறகு…
கடந்த 38 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டு முழுவதும் எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதம் அடிக்காதது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 64 ரன்கள் எடுத்ததே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, 64 ரன்கள் குவித்து அவுட்டானார். 2024ம் ஆண்டில் இது எட்டாவது மாதம், அதாவது ஆகஸ்ட் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற டிசம்பர் மாதம் வரை எந்த ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாட போவதில்லை. இதன்பிறகு இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடைசியாக 1985ம் ஆண்டு மட்டும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் வருடம் முழுவதும் சதம் அடிக்கவில்லை. அந்த ஆண்டு கேப்டன் முகமது அசாரூதீன், 93 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தார். இந்த ஆண்டும் கேப்டன்தான் அதிகபட்ச ரன்களை அடித்துள்ளார்.
ALSO READ: IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணி வருகின்ற செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி – பிப்ரவரியில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் சதம் அடிக்காத மோசமான சாதனை என்ற வரலாறு படைக்கப்பட்டது.