Aman Sehrawat: வெண்கலம் வெல்ல அமன் செய்த போராட்டம்.. வெறும் 10 மணி நேரத்தில் 4.5 கிலோ எடை குறைப்பு!
Paris Olympics 2024: வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அமான் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை தோற்கடித்தார். இதன் மூலம் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 5 வெண்கலம், 1 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக அமன் செஹ்ராவத் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், வெறும் 10 மணி நேரத்தில் சுமார் நான்கரை கிலோ எடையை குறைத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன்.
அமன் செஹ்ராவத்: 21 வயதே ஆன இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் நேற்று இரவு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார். 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கல பதக்கம் வென்றதன்மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அமான் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை தோற்கடித்தார். இதன் மூலம் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 5 வெண்கலம், 1 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக அமன் செஹ்ராவத் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், வெறும் 10 மணி நேரத்தில் சுமார் நான்கரை கிலோ எடையை குறைத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன்.
என்ன ஆனது..?
கடந்த வியாழக்கிழமை அன்று நடந்த அரையிறுதியில் சாம்பியான ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார் அமன் செஹ்ராவத். இந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக அமன் தோல்வியை சந்தித்தார். இந்த தோல்விக்கு பிறகு 57 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்த அமன் செஹ்ராவத்தின் எடை 61.5 ஆக உயர்ந்துள்ளது. வினேஷ் போகத்தைப் போலவே, அமன் செஹ்ராவத்தின் எடை அதிகரித்ததால் வெண்கல போட்டியில் தகுதி நீக்கம் செய்யபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது. இதன் காரணமாக ஒரே இரவில் அமன் செஹ்ராவத், சுமார் 4.5 கிலோ குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எப்படி எடையை குறைத்தார்..?
அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய மல்யுத்த வீரரிடம் தோற்ற அமானின் எடை 61.5 கிலோவாக இருந்தது. அவரது பிரிவில் உள்ள எடையை விட 4.5 கிலோ அதிகம். இதையடுத்து, இந்திய பயிற்சியாளர்கள் ஜக்மந்தர் சிங் மற்றும் வீரேந்திர தஹியா, ஆறு பேர் கொண்ட மல்யுத்த குழுவுடன் இணைந்து அமன் செஹ்ராவத்தின் எடையை குறைக்கும் பணியை முடிக்க முடிவு செய்தனர். இதை செய்ய இவர்கள் அனைவருக்கும் 10 மணிநேரம் மட்டுமே இருந்தது.
அமன் செஹ்ராவத்துக்கு முதலில் ஒன்றரை மணி நேரம் மேட்டில் மல்யுத்தம் செய்ய வைத்துள்ளனர். இதன்பிறகு, ஒரு மணி நேரம் நீராவி குளியல் அளிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பிறகு அமன் செஹ்ராவத் ஜிம்மில் ஒரு மணி நேரம் டிரெட்மில்லில் ஓடியுள்ளார். தொடர்ந்து, 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட அமன், 5 நிமிடங்களுக்கு 5 அமர்வுகள் என மீண்டும் நீராவி குளியல் கொடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Dinner: இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்க.. இது இவ்வளவு பிரச்சனைகளை சரிசெய்யும்!
இதன் மூலம், அமன் செஹ்ராவத் 3.6 கிலோ எடையை குறைத்துள்ளார். தொடர்ச்சியாக அமன் செஹ்ராவத் லேசான ஜாகிங் மற்றும் 15 நிமிட ஓட்டப் பயிற்சியை எடுத்துக்கொண்டார். இதனால், 4.30 மணியளவில் அமானின் எடை 56.9 கிலோவாக இருந்தது. இதற்கிடையில், பயிற்சிகளின் போது அமனுக்கு லிக்வார்ம் வாட்டர், எலுமிச்சை, தேன் மற்றும் காஃபி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிகள் அனைத்தும் முடித்து எடையை குறைத்த பிறகு அமன் உறங்க கூட அனுமதிக்கப்படவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அமன் செஹ்ராவத், அடுத்த நாள் வெண்கலப் போட்டியில் களமிறங்கி பதக்கத்தை வென்றார்.