HBD Anil Kumble: தாடை உடைந்தும் பவுலிங்.. சுழல் சூறாவளி.. அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்..! - Tamil News | Anil Kumble Birthday: Anil Kumble profile, biography, stats, icc records and more in tamil | TV9 Tamil

HBD Anil Kumble: தாடை உடைந்தும் பவுலிங்.. சுழல் சூறாவளி.. அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்..!

Anil Kumble: கடந்த 2002ம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அனில் கும்ப்ளே 14 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அன்றைய போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிந்தபோது அனில் கும்ப்ளேவின் தாடை உடைந்தது.

HBD Anil Kumble: தாடை உடைந்தும் பவுலிங்.. சுழல் சூறாவளி.. அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்..!

அனில் கும்ப்ளே (Image: Getty)

Published: 

17 Oct 2024 10:56 AM

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு இன்று (அக்டோபர் 17) தனது 54 பிறந்தநாளை கொண்டாடுகிறார். அனில் கும்ப்ளே கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அன்று பெங்களூரில் பிறந்தார். கும்ப்ளே தனது மாயாஜால சுழல் பந்துவீச்சால், இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல பக்கங்களில் அனில் கும்ப்ளேவின் பெயர்கள் இல்லாமல் சாதனை பட்டியல் இருக்காது என்றே சொல்லலாம். இந்தநிலையில், அனில் கும்ப்ளேவின் பிறந்தநாளான இன்று, இந்திய அணிக்காக அவர் செய்த சாதனை பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Health Tips: காய்ச்சல், சளி பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? தினமும் இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!

சாதனைகள்:

இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே, 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில், 35 முறை 5 விக்கெட்களையும், ஒட்டுமொத்தமாக 8 முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும். அதேபோல், இந்திய அணிக்காக 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனில் கும்ப்ளே, 337 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஒரு சகாப்தம் அனில் கும்ப்ளேவால் கடந்தது என்றே சொல்லலாம். கடந்த 1993ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட பந்து வருடங்கள் இந்தியாவின் மேட்ச் வின்னிங் பவுலராக அனில் கும்ப்ளே இருந்தார். இந்திய அணி எப்போதெல்லாம் கடினமாக சூழ்நிலையில் சிக்கி தவிக்கிறதோ, அப்போது கும்ப்ளேவின் பங்கால் இந்திய அணி மீட்டெழும்.

அனில் கும்ப்ளே செய்த சம்பவங்கள்:

கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி அனில் கும்ப்ளே செய்த சாதனையை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்னென்றும் நிலைத்திருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அனில் கும்ப்ளே. இதன்மூலம், இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே படைத்தார்.

டெல்லி பெரோஸ் ஷா ஸ்டேடியத்தில் (தற்போதைய அருண் ஜெட்லி ஸ்டேடியம்) பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கும்ப்ளேவின் சிறப்பான ஆட்டத்தால் சென்னையில் நடந்த தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி டெல்லி ஸ்டேடியத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்த இன்னிங்ஸில் அனில் கும்ப்ளே வெறும் 74 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

தாடை உடைந்த நிலையில் பவுலிங்:

கடந்த 2002ம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பந்துவீசிய அனில் கும்ப்ளே 14 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அன்றைய போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிந்தபோது அனில் கும்ப்ளேவின் தாடை உடைந்தது. அப்போதும், ஓய்வு எடுக்காத அனில் கும்ப்ளே தலையில் கட்டை கட்டி பந்துவீச வந்தார். வந்ததும் 25 பந்துகளில் 4 ரன்களை எடுத்திருந்த ஜாம்பவான் பிரையன் லாராவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

அறிமுகம் மற்றும் ஓய்வு:

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 1990ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டரில் அனில் கும்ப்ளே அறிமுகமானார். இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அதேபோல், கும்ப்ளே தனது கடைசி ஒருநாள் போட்டியில் 2007ம் ஆண்டு விளையாடினார். ஓய்வுக்கு பிறகு சிறிது காலம் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அனில் கும்ப்ளே செயல்பட்டார்.

கர்ப்ப காலத்தில் இந்த ஆடைகளை அணியாதீர்கள்
கர்ப்ப காலத்தில் காஃபி குடிக்கலாமா?
மழைக்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லதா..?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனைகள்..!