Watch Video: காற்றில் பறந்து கேட்ச்.. சூப்பர்மேனாக மாறிய ஆயுஷ் பதோனி.. வைரலாகும் வீடியோ!
Ayush Badoni: திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏசிசி டி20 வளர்ந்து வரும் ஆசியக் கோப்பை 2024ல் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது, இந்திய வீரர் ஆயுஷ் பதோனியின் கேட்ச் ஒன்று இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ALSO READ: IPL 2025 Retention: இன்னும் பதிலை சொல்லாத தோனி! அடுத்த சீசனில் விளையாடுவாரா? ஓய்வு பெறுவாரா?
ஏசிசி வளர்ந்து வரும் டி20 ஆசிய கோப்பையின் 8வது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் நேற்று மோதின. ஓமனில் உள்ள அல் அமராத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இப்போட்டியானது. இரு அணிகளுக்கும் இரண்டாவது போட்டியாக அமைந்தது. முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐦𝐨𝐝𝐞 🔛
A super catch by Ayush Badoni! 👐@BCCI#MensT20EmergingTeamsAsiaCup2024 #ACC pic.twitter.com/imOQae1Xu6
— AsianCricketCouncil (@ACCMedia1) October 21, 2024
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் 5.5 ஓவர்களில் 39 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறினர். இந்திய அணிக்காக 15வது ஓவரை வீச ராமன் தீப் வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜவதுல்லா லாங் ஆனில் தூக்கி அடித்தார். அப்போது, அந்த பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆயுஷ் பதோனி பந்து சென்ற பக்கம் ஓடினார். அந்த நேரத்தில், பந்து தூரமாக இருப்பதை கண்ட பதோனி டக்கென தாவி கேட்சை பிடித்தார். அனைவரும் அந்த பந்து பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு செல்லும் என்றே நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காதபோது பதோனி சாகசம் செய்து கேட்சை எடுத்தார். இதை, இந்திய அணியை சேர்ந்த சக வீரர்களால் கூட நம்ப முடியவில்லை.
ஆயுஷ் பதோனியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ க்ளிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளது.
போட்டியில் நடந்தது என்ன..?
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 16.5 ஓவர்களில் 107 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகபட்சமாக ராகுல் சோப்ரா 50 பந்துகளில் 50 ரன்களும், கேப்டன் பஷில் ஹமீது 12 பந்துகளில் 22 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரசீக் சலாம் 3 விக்கெட்டுகளும், ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், அன்ஷூல், வைபவ், அபிஷேக் சர்மா. நெஹல் வதேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்திருந்தனர்.
அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா:
108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணி 10.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. அபிஷேக் சர்மா வெறும் 24 பந்துகளில் 241.66 ஸ்டிரைக் ரேட்டில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், கேப்டன் திலக் வர்மாவும் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். முன்னதாக, முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணி தற்போது நான்கு புள்ளிகளுடன் B குழுவில் முதலிடத்தில் உள்ளது. வருகின்ற புதன்கிழமை தனது கடைசி குழு ஆட்டத்தில் இந்திய அணி ஓமனை எதிர்கொள்கிறது.