5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Babar Azam: கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்.. பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்..?

Pakistan national cricket team: பாபர் அசாம் திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புதிய கேப்டனை தேர்வு செய்யும் சவாலை எதிர்கொள்கிறது. பாபரின் ராஜினாமாவுக்குப் பிறகு, அனுபவம் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்தலாம். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஷதாப் கான், முகமது ரிஸ்வான் மற்றும் ஹஹீன் ஷா அப்ரிடி ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்.

Babar Azam: கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்.. பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்..?
ரிஸ்வான் – சதாப் கான் – அப்ரிடி (PTI)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 03 Oct 2024 15:26 PM

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் சமீபத்தில் அறிவித்தார். கடந்த இரண்டு வருடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா செய்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வி காரணமாக பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாமை ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக நியமனம் செய்தது. இதன் காரணமாக, பாகிஸ்தான் இந்தாண்டு டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் விளையாடியது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை.

பாபர் அசாம் திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புதிய கேப்டனை தேர்வு செய்யும் சவாலை எதிர்கொள்கிறது. பாபரின் ராஜினாமாவுக்குப் பிறகு, அனுபவம் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்தலாம். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஷதாப் கான், முகமது ரிஸ்வான் மற்றும் ஹஹீன் ஷா அப்ரிடி ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம்.

ALSO READ: Home Tips: தினமும் துணிகளை அயர்ன் செய்யும் தொல்லையா? இப்படி செய்தால் இந்த கஷ்டம் இருக்காது!

பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் சவால்:

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியின் செயல்திறன் ஒட்டுமொத்தமாக சிறப்பாக இல்லை. கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பிறகு, நடந்த ஐசிசி போட்டிகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதே நிலைமைதான் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும்.. மேலும், வங்கதேசம் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் வெயிட் பால் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இதைதொடர்ந்து, 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாட இருக்கிறது. இதற்குள், பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் அவசியம்.

பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார்..?

ஷதாப் கான்:

பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் நீண்ட ஆண்டுகாலமாக பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக இருந்து வருகிறார். ஷதாப் கான் தனது 22வது வயதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, மிக இளம் வயதில் கேப்டனான வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின், பாபர் அசாமின் வருகையால் இவரது கேப்டன் பதவி தள்ளி போனது.  இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெறுகிறது. அந்த பிஎஸ்எல்லில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

முகமது ரிஸ்வான்:

பாகிஸ்தான் அணியில் இருந்து சர்பராஸ் கான் வெளியேற்றப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அணியின் முழுநேர விக்கெட் கீப்பராக முகமது ரிஸ்வான் இருந்து வருகிறார். பாகிஸ்தான் அணி தடுமாறும்போதெல்லாம் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை மீட்டு கொடுப்பார். மேலும், முகமது ரிஸ்வானுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) முல்தான் சுல்தான் அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் உள்ளது.  ஆனால், இதுவரை முகமது ரிஸ்வானுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து,  பாபர் அசாமுக்கு மாற்றாக முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ரிஸ்வானின் திறமையை கருத்தில் கொண்டு அவரது பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ICC Women T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்… டூடுலில் சிறப்பு கௌரவம் செய்த கூகுள்!

ஷாஹீன் ஷா அப்ரிடி:

ஷாஹீன் ஷா அப்ரிடி 5 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.  இதில், ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வியடைந்தது. ஆரம்பமே, ஷாஹீன் ஷாவுக்கு சரியாக செல்லவில்லை என்றாலும், அவருக்கு கேப்டன் பதவிக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். பிஎஸ்எல்லில் ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையில் அவரது அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பாபர் அசாம் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் கேப்டனாக பதவி ஏற்றதன் காரணமாக, டி20 கேப்டன் பதவியில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி திடீரென நீக்கப்பட்டார். பாபர் ராஜினாமா செய்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஷாஹீனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம்.

Latest News