Watch Video: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு.. முதல் பந்திலேயே 10 ரன்கள்.. வங்கதேசத்திற்கு அடித்த ஆஃபர்!

Bangladesh vs South Africa: ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது. தற்போது இந்த அரிய சாதனை ரபாடாவின் கணக்கில் சேர்ந்துள்ளது.

Watch Video: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வ நிகழ்வு.. முதல் பந்திலேயே 10 ரன்கள்.. வங்கதேசத்திற்கு அடித்த ஆஃபர்!

வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா (Image: ban/twitter)

Updated On: 

04 Nov 2024 17:03 PM

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று அசத்தியது. தற்போது, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாகூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது. தற்போது இந்த அரிய சாதனை ரபாடாவின் கணக்கில் சேர்ந்துள்ளது.

ALSO READ:IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..!

முதல் பந்தில் 10 ரன்கள்:

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 575 ரன்கள் குவித்தது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மன் இஸ்லாம், முகமது ஹசன் ஜாய் ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். இதன்போது, ​​தென்னாப்பிரிக்கா சார்பில் இன்னிங்ஸின் முதல் ஓவரை வீச ககிசோ ரபாடா களம் இறங்கினார். ரபாடா தனது ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் கொடுக்கவில்லை. எனினும், சக வீரர் செனூரான் முத்துசாமி ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால், வங்கதேசத்துக்கு 5 ரன்கள் பெனால்டியாக நடுவர்கள் வழங்கினர். வங்கதேசத்தின் இன்னிங்ஸ் 5 ரன்களுடன் தொடங்கியது.

இரண்டாவது பந்திலேயே ககிசோ ரபாடாவின் தவறால் வங்கதேச அணிக்கு மீண்டும் 5 ஃப்ரீ ரன் கிடைத்தது. இந்த ஓவரின் இரண்டாவது பந்தை ரபாடா வைட் அடித்தார். இந்த பந்து பிட்சை தாண்டி வெளியே விழுந்ததால் விக்கெட் கீப்பரால் கூட பிடிக்க முடியவில்லை. எனவே, பந்து ஓடி சென்று பவுண்டரி எல்லையை தொட்டது. இதன்மூலம், அந்த பந்தில் 4 ரன் பவுண்டரியாகவும், 1 ரன் வைடாகவும் வந்தன. எனவே இந்த பந்தில் 5 ரன்கள் எடுத்த பங்களாதேஷ் அணி 1 பந்தில் 10 ரன்கள் தனது கணக்கில் சேர்த்தது. அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் 10 ரன்கள் எடுப்பது என்பது மிகவும் அரிதான விஷயம்.

தோல்வியை சந்தித்த வங்கதேசம்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் டி ஜார்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியன் முல்டர் ஆகியோர் சதம் அடித்து ரன்களை குவித்தனர். டோனி டி ஜியோர்ஜி 269 பந்துகளில் 177 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களும் எடுத்தனர். வியன் முல்டர் 105 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ALSO READ: On This Day 2005: இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம்.. 183 ரன்கள் அடித்து மிரட்டிய எம்.எஸ்.தோனி!

அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மொமினுல் மட்டும் 82 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, பாலோ ஆன் வாங்கி மீண்டும் பேட்டிங் செய்த வங்கதேச அணி 143 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ரபாடா 5 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் கேசவ் மகாராஜா 5 விக்கெட்டுகளும், முத்துசாமி 4 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்ற வங்கதேசம், இந்தியாவிடம் இந்திய மண்ணில் 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் இழந்துள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!