5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BCCI: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசு..? யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாதனைப்படைத்த இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்தது. ஐசிசி அறிவித்த மொத்த பரிசுத்தொகையை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சங்கள் எழுந்தன. இதில் யார் யாருக்கு எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.

BCCI: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசு..? யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
பரிசு விபரம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 08 Jul 2024 21:20 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

Also Read: Happy Birthday Ganguly: 52 வது பிறந்த நாளை கொண்டாடும் கிரிக்கெட்டின் தாதா.. ரசிகர்கள் வாழ்த்து..!

உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசியை 125 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்திய அணிக்கு பரிசுத்தொகையை வழங்கி இந்திய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கவுரவப்படுத்தினார். ஐசிசி வழங்கிய தொகையைவிட பிசிசிஐ 4 மடங்கு தொகையை வழங்கிய நிலையில், அந்த தொகை எவ்வாறு சக வீரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பரிசுத்தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்ற 15 வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யஷஷ்வி ஜெய்ஷ்வால் மற்றும் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. தேர்வு குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

Also Read:T20 World Cup: சாம்பியன் டிராபி தொடரில் கேப்டனாக ரோகித் ஷர்மா தொடர்வார்- பிசிசிஐ செயலாளர்

பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாயும், மற்ற ஊழியர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ரிசர்வ் வீரர்களான சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்போன்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பிசியோதெரபிஸ்ட் 3 பேர் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் 3 பேர், மசாஜ் செய்பவர்கள் 2 பேர் என உடற்பயிற்சி வல்லுநர்கள் ஆகியோருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

 

Latest News