5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு

Indian Head Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும், கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்  (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   இந்திய தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம்… ஜெய்ஷா அறிவிப்பு
கவுதம் கம்பீர்
intern
Tamil TV9 | Updated On: 09 Jul 2024 21:12 PM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணியில் நீண்ட நாட்களாக பிசிசிஐ ஈடுபட்டு வந்தது.  டி20 உலக கோப்பையை வென்ற  இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் கடந்த 50 ஓவர் உலக  கோப்பை கிரிக்கெட் தொடருடன் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், பிசிசிஐ இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என அறிவித்த நிலையில், அவரின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிவடைந்த பயிற்சியாளர் பதவியை, டி20 உலகக்கோப்பை கருத்தில் கொண்டு டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய பயிற்சியாளரை தேடி வரும் நிலையில், ராகுல் டிராவிட்டை மீண்டும் விண்ணப்பிக்கும்படி வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தது.  கடந்த டி20 உலக கோப்பை தொடருடன் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவரிடம் பிசிசிஐ மீண்டும் பதவியில் நீடிக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், அதனை மறுத்த ராகுல் டிராவிட் தன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணியதால் உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார்.  ராகுல் டிராவிட் பதவிக்காலத்தில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலக கோப்பை அரையிறுதிப்போட்டி வரை சென்ற நிலையில் ஆசிய கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், அவரே வெளிப்படையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விருப்பம் தான் என்று தெரிவித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் அந்த அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.

இதனை தொடர்ந்து அவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த நிலையில், அவரிடம் நேர்காணல் நடத்தி இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அவரை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற எனக்கு விருப்பம் தான். உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதைக் காட்டிலும் கவுரமான ஒரு விஷயம் இருக்க முடியுமா என்ன? என்று கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பினார். 

Also Read:Olympic 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து..! 

இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னர் புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா முன்பு கூறியிருந்த நிலையில்,  இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கம்பீர்  ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை மூன்று ஆண்டுகளுக்கு  தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 12 கோடியில் இருந்து 15 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்ட நிலையில்,  சம்பள பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதால், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Latest News