BCCI Monthly Pensions: இந்திய அணியில் சீனியர்..! யுவராஜ் சிங்கை விட குறைந்த ஓய்வூதியம் பெறும் காம்ப்ளி.. காரணம் என்ன?
Vinod Kambli: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் வீழ்ச்சி 1994ல் தொடங்கி 1995ல் டெஸ்ட் வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்தது. வினோத் காம்ப்ளி தனது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும், மூன்று முறை டக் அவுட் ஆகியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகிறது. பக்கவாதம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும், பணப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் மாத ஓய்வூதியத்தை நம்பியே தற்போது வினோத் காம்ப்ளி, தனது குடும்ப பொருளாதாரத்தையும், சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து வினோத் காம்ப்ளி பெறும் ஓய்வூதியம் யுவராஜ் சிங் பெறும் ஓய்வூதியத்தை விட குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: IND vs AUS: மழை இல்லாமல் முடிந்த 2வது நாள்.. அதிரடியாக ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியா.. பும்ரா ஆறுதல்!
பிசிசிஐ வழங்கும் ஓய்வூதிய பட்டியல்:
கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஓய்வுபெற்ற வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இதையடுத்து புதிய ஓய்வூதியத்தின்படி, முன்பு ரூ. 15,000 பெற்ற முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு இப்போது ரூ. 30,000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ரூ. 37,500 பெற்று கொண்டிருந்த முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் இப்போது ரூ. 60,000 ஓய்வூதியமாக பெறுகிறார்கள். மேலும், ரூ. 50,000 பெற்ற முன்னாள் வீரர்கள் இப்போது ரூ. 70,000 பெறுகிறார்கள்.
सफलता के 100 होते है…
लेकिन असफलता का कोई नही होता…😎 #SachinTendulkar #VinodKambli pic.twitter.com/O9ipmCGQzS— Satish Goyal (@Satish_Goyal73) December 7, 2024
அதன்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பிசிசிஐ-யிடமிருந்து ரூ. 60.000 ஓய்வூதியமாக பெறுகிறார். அதேசமயம் காம்பிளி பிசிசிஐயிடம் இருந்து ரூ. 30,000 சம்பளமாக பெறுகிறார். இதற்கு காரணம், இவர்கள் இருவரும் விளையாடிய சர்வதேச போட்டிகள்தான். முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பிரிவின் கீழ் யுவராஜ் சிங் வருகிறார். எனவே, அவருக்கு ரூ. 60,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. மறுபுறம், வினோத் காம்ப்ளியின் ஓய்வூதியம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட முதல்தர போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், 25க்கும் குறைவான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதே இதற்கு காரணம். அதன்படி, காம்ப்ளியின் ஓய்வூதியம் யுவராஜ் பெறுவதில் பாதி என்பது தெளிவாகிறது.
Vinod kambali & Yuvraj Singh Very Rare Footage against Australia.#VinodKambli & #Yuvrajsingh @YUVSTRONG12 #INDvsAUS #AUSvINDIA pic.twitter.com/49RpKmL0bu
— Ninad (@Ninad0921) December 8, 2024
காம்ப்ளியின் வீழ்ச்சி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் வீழ்ச்சி 1994ல் தொடங்கி 1995ல் டெஸ்ட் வாழ்க்கை என்பது முடிவுக்கு வந்தது. வினோத் காம்ப்ளி தனது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும், மூன்று முறை டக் அவுட் ஆகியிருந்தார். 1995ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து காம்ப்ளி நீக்கப்பட்டார். அப்போதுதான் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க தொடங்கினார். ராகுல் டிராவிட்டின் அட்டகாசமான டெஸ்ட் ஆட்டங்கள்தான் காம்ப்ளியின் டெஸ்ட் வாழ்க்கை தலைவிதியை மாற்றியது.
ALSO READ: பி.வி.சிந்துக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ!
பிசிசிஐ எதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குகிறது..?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்கும் செயல்முறை பொதுவாக முன்னாள் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் நீளம் மற்றும் அவர்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. வினோத் காம்ப்ளி தனது ஆரம்பக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் தவறான பழக்கவழக்கங்களால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை என்பது மிகவும் நீண்டது. அவர் இந்திய அணிக்காக செய்த சாதனைகளும் பல, இந்திய அணி 2 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். இதன் காரணமாகவே யுவராஜ் சிங்கிற்கு அதிக ஓய்வூதிய தொகை வழங்கப்படுகிறது.
இரு வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 33.92 சராசரி 1900 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல், 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களுடன் 111 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களுடன் 28 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1084 ரன்களும், 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2477 ரன்களும் எடுத்துள்ளார்.