5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BCCI Prize Money: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பையை சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஏற்கனவே ஐசிசி இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.20 கோடியே 42 லட்ச ரூபாயை இந்திய அணி பரிசுத்தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BCCI Prize Money: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி
சாம்பியன் இந்தியா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 01 Jul 2024 01:14 AM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை தொடர் முழுவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட்கோலி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Also Read: T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

டி20 உலகக் கோப்பை தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத்தொடர்ந்து 2010 ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை மீண்டும் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய நிலையில், பின்னர் நடைபெற்ற எந்த போட்டியிலும் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நேற்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனைப்படைத்தது.

Also Read: “என் பிறந்தநாள் பரிசு இது” இந்திய அணிக்கு வாழ்த்து சொன்ன தோனி!

இந்தியாவின் பல வருட கனவை நனவாக்கி வெற்றிக்கோப்பையை கைப்பற்றிய ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அந்த அணி சிறந்த திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.