Jay Shah: ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா..? விலகும் பார்க்லே.. வெளியான டாப் அப்டேட்..!
ICC New Chairman: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தனது பதவிக்காலம் முடிந்ததும் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது இந்த பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27ம் தேதியே கடைசி நாள்.
ஜெய் ஷா: ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தனது பதவிக்காலம் முடிந்ததும் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில், தற்போது இந்த பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27ம் தேதியே கடைசி நாள். இருப்பினும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா என்பது முழுமையாக தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெக் பார்க்லே:
ஐசிசியின் தலைவராக ஒருவர் மூன்று முறை அதாவது 6 ஆண்கள் பதவி வகிக்கலாம். நியூசிலாந்தின் வழக்கறிஞரான கிரெக் பார்க்லே இதுவரை நான்கு ஆண்டுகளை ஐசிசி தலைவராக நிறைவு செய்துள்ளார். அவர் இன்னும் ஒரு முறை ஐசிசி தலைவராக பதவி வகிக்க வாய்ப்புகள் இருந்தும், அதை வேண்டாம் என்று விலக முடிவு செய்துள்ளார்.
தற்போதைய தலைவர் கிரேக் பார்க்லே, ஐசிசி தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக நிற்க போவதில்லை என்றும், நவம்பர் மாத இறுதியில் அவரது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த பிறகு பதவி விலகுவார் என்றும் ஐசிசி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஜெய் ஷா விண்ணப்பிப்பாரா..?
ஐசிசி தலைவர் பதவிக்கு கிரெக் பார்க்லேக்கு அடுத்தபடியாக ஜெய் ஷா முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார். பிசிசிஐ மற்றும் ஏசிசி தலைவராக பதவி வகிக்கும் ஜெய் ஷா, தற்போது ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்களின் தலைவராக இருக்கிறார். இதில், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வாக்களிக்கும் ஐசிசி உறுப்பினர்களிடம் நல்ல மதிப்பை ஜெய் ஷா பெற்றுள்ளார். இந்த பதவியை ஏற்க ஜெய் ஷா விருப்பம் தெரிவித்ததை அடுத்து பார்க்லே இந்த விலகும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஐசிசி தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்..?
ஐசிசி விதிகளின்படி, ஐசிசி தலைவர் தேர்தலில் 16 உறுப்பினர்களின் வாக்குகள் உள்ளன. தலைவர் பதவியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஒன்பது வாக்குகள் (51%) பெரும்பான்மையை பெற வேண்டும். முன்னதாக, தலைவர் பதவிக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வேண்டும் என்று இருந்தது. சமீபத்தில் இந்த விதி மாற்றப்பட்டது. ஜெய் ஷாவுக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது ஆதரவை தெரிவித்ததாகவும், இது தவிர, பல கிரிக்கெட் வாரியங்களும் ஜெய் ஷாவுக்கு தங்கள் ஆதரவை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
ALSO READ: Health Tips: சிறிய விஷயத்தை மறந்துவிடுகிறீர்களா? இதுதான் அம்னீஷியாவா..? என்ன செய்யலாம்?
ஜெய் ஷா வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு:
ஜெய் ஷா வருகின்ற டிசம்பர் 1ம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்றால், ஐசிசி வரலாற்றில் 35 வயதில் பதவியேற்ற இளம் தலைவர் என்ற சாதனை படைப்பார். மேலும், ஜக்மோகன் டால்மியா, ஷரத் பவார், என் சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோருக்கு பிறகு ஐசிசியின் தலைவர் பதவியை பகித்த இந்தியர் என்ற பெருமையையும் பெறுவார்.