5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs AUS: காபாவில் இதுவரை கலக்கிய இந்தியர்கள் யார் யார்..? கோலி செயல்திறன் எப்படி..?

BGT 2024: காபா ஸ்டேடியத்தில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. காபா ஸ்டேடியத்தில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள கோலி 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

IND vs AUS: காபாவில் இதுவரை கலக்கிய இந்தியர்கள் யார் யார்..? கோலி செயல்திறன் எப்படி..?
இந்திய வீரர்கள் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 11 Dec 2024 22:41 PM

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் வருகின்ற டிசம்பர் 14ம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றால், அதன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக் கனவு சாத்தியம் இல்லாமல் போய்விடும்.

இதுதவிர கடந்த முறை காபா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே கடந்த முறை பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். ஆனால் அதற்கு முன் இந்த காபா ஸ்டேடியத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் விராட் கோலி இதுவரை எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை பார்ப்போம்.

ALSO READ: Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?

விராட் கோலி சொதப்பல்:

தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே சதம் அடித்தார். மற்ற 3 இன்னிங்ஸ்களிலும் அவரது செயல்திறன் மிகவும் மோசமாகவே இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் கோலி சதம் அடித்தார். மீதமுள்ள மூன்று இன்னிங்ஸ்களிலும் கோலி சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

இப்போது, ​​இதைத் தவிர, காபா ஸ்டேடியத்தில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. காபா ஸ்டேடியத்தில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள கோலி 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 19 ரன்கள் எடுத்த கோலி, இரண்டாவது இன்னிங்சில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அதாவது ஒட்டுமொத்தமாக கோலி இதுவரை கபாவில் ஸ்டேடியத்தில் 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி இந்த ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளதால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காபாவில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் யார்..?

காபா ஸ்டேடியத்தில் இதுவரை அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் மொட்டகனஹள்ளி லட்சுமிநரசு ஜெயசிம்ஹா படைத்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் இதுவரை லட்சுமிநரசு 175 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் இந்த ஸ்டேடியத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 112 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, ஜெய்சிம்ஹாவின் சாதனையை முறியடிக்க இன்னும் 64 ரன்கள் மட்டுமே ரிஷப் பண்ட்டுக்கு தேவையாக உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு முதன்முறையாக தோற்கடித்தது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 23 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட்,  இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 328 ரன்கள் இலக்கை துரத்தியபோது ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.

ALSO READ: Vinod Kambli Net Worth: ஒரு காலத்தில் கோடியில் புரண்ட காம்பிளி.. தற்போது ஓய்வூதியத்திற்கு காத்திருப்பு.. சரிந்தது எப்படி?

முகமது சிராஜ் அதிக விக்கெட்டுகளை எடுப்பாரா..?

கடந்த 2021ம் ஆண்டு காபா டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதில் முகமது சிராஜும் முக்கிய பங்கு வகித்தார். சிராஜ் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், இந்த ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை எரபள்ளி பிரசன்னாவின் படைத்துள்ளார். இவர் இதுவரை 2 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முகமது சிராஜ் நம்பர் 1 ஆக இன்னும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.

 

Latest News