5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் இவரா..? அப்போ! விராட் கோலி எத்தனையாவது இடம்?

BGT 2024-25: வருகின்ற நவம்பர் 22ம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்படியான சூழ்நிலையில், பார்டர் - கவாஸ்கர் டிராபி வரலாற்றில் இதுவரை அதிக சதம் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலை இங்கே பார்ப்போம்.

Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் இவரா..? அப்போ! விராட் கோலி எத்தனையாவது இடம்?
பார்டர்-கவாஸ்கர் டிராபி (Image: GETTY and PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2024 15:53 PM

நியூசிலாந்துக்கு எதிரான 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமெனில் குறைந்தது 4 வெற்றி, ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருப்பதால் இந்தியாவை எளிதில் வெற்றி பெற விடாது.

வருகின்ற நவம்பர் 22ம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்படியான சூழ்நிலையில், பார்டர் – கவாஸ்கர் டிராபி வரலாற்றில் இதுவரை அதிக சதம் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலை இங்கே பார்ப்போம்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்! யார் அந்த இந்திய வீரர்..?

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக சதங்கள்:

சச்சின் டெண்டுல்கர்:

வழக்கம்போல்தான் எந்த பட்டியலை எடுத்தாலும் முதல் இடத்தில் இருக்கும் பெயர் சச்சின் டெண்டுல்கர். அந்தவகையில், பார்டர் – கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரே முதல் இடத்தில் உள்ளது. இதுவரை பார்டர் – காவஸ்கர் டிராபி வரலாற்றில் 34 போட்டிகளில் 65 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 9 சதங்களுடன் 3,362 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பல போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் அடிப்படையில், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி இதுவரை 8 சதங்கள் உள்பட 1979 ரன்கள் குவித்து 2வது இடத்தில் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

டெஸ்ட் வரலாற்றில் தற்போதைய காலத்தில் ஜாம்பவானாக வலம் வருகிறார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பார்டர் – கவாஸ்கர் டிராபி வரலாற்றில் ஆஸ்திரேலிய அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 18 போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 8 சதங்கள் உள்பட 1,887 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளார்.

ரிக்கி பாண்டிங்:

பார்டர்- கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை பார்டர்- கவாஸ்கர் டிராபியில் 29 போட்டிகளில் 51 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 8 சதங்கள் உள்பட 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

மைக்கேல் கிளார்க்:

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 40 இன்னிங்ஸ்களில் களமிறங்கியுள்ள இவர் 7 சதங்கள் உள்பட 2,049 ரன்கள் எடுத்துள்ளார்.

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக ரன்கள்:

சச்சின் டெண்டுல்கர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 3262 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

ரிக்கி பாண்டிங்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2555 ரன்கள் குவித்து 2வது இடத்தில் உள்ளார்.

விவிஎஸ் லட்சுமண்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமண் 2434 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளார்.

ராகுல் டிராவிட்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளரும், தி வால் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட் 2143 ரன்கள் குவித்து 4வது இடத்தில் உள்ளார்.

மைக்கேல் கிளார்க்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் 2049 ரன்கள் குவித்து 5வது இடத்தில் உள்ளார்.

சேட்டேஷ்வர் புஜாரா:

இந்திய அணியின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சேட்டேஷ்வர் புஜாரா பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2033 ரன்கள் எடுத்து 6வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இதுவரை 1979 ரன்கள் எடுத்து 7வது இடத்தில் உள்ளார்.

ALSO READ: WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

மேத்யூ ஹைடன்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன் 1888 ரன்கள் குவித்து 8வது இடத்தில் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 1887 ரன்கள் குவித்து 9வது இடத்தில் உள்ளார்.

வீரேந்திர சேவாக்:

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் 1738 ரன்கள் எடுத்து 10வது இடத்தில் உள்ளார்.

Latest News