Border Gavaskar Trophy: 9 வெற்றிகள்.. அதிக ரன்கள்.. இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்!

BGT 2024-25: ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 9 வெற்றி, 30 தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

Border Gavaskar Trophy: 9 வெற்றிகள்.. அதிக ரன்கள்.. இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்!

பார்டர் கவாஸ்கர் டிராபி (Image: PTI and GETTY)

Published: 

21 Nov 2024 07:36 AM

பார்டர் – கவாஸ்கர் டிராபி நாளை பெர்த் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இரு அணிகளும் நவம்பர் 21ம் தேதியான நாளை முதல் டெஸ்ட் போட்டியில் களம் காண்பார்கள். கடந்த 1996ம் ஆண்டு முதல் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடர் விளையாடப்பட்டு வருகிறது. இந்த டெஸ் தொடரில் பல்வேறு சாதனைகள் பதிவு செய்யப்பட்டு, சில சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த 8 ஆண்டுகளாக பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்திய அணிதான் வைத்துள்ளது.

தற்போது நடைபெறவுள்ள பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இளம் வீரர்களுக்கு புது அனுபவத்தை தரலாம். அந்தவகையில், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி படைத்துள்ள சாதனையை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக முறை டக் அவுட்! யார் அந்த இந்திய வீரர்..?

நேருக்குநேர்:

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 9 வெற்றி, 30 தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

அதிகபட்ச ஸ்கோர்:

கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணி சிட்னி ஸ்டேடியத்தில் புதிய வரலாறு படைத்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 241 ரன்களும், விவிஎஸ் லட்சுமண் 178 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 705 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

குறைந்தபட்ச ஸ்கோர்:

கடந்த 2020ம் ஆண்டு ஓவல் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியானது இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கறை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்குள் சுருண்டது. இதுவே, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்.

அதிக ரன்கள்:

பார்டர் – கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சாதனையை இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இவர் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள் உள்பட 1809 ரன்கள் எடுத்துள்ளார். இது பல ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்:

ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலி பெயரில் உள்ளது. இவர் கடந்த 2014-15 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்காக 8 இன்னிங்ஸ்களில் 692 ரன்கள் எடுத்திருந்தார்.

ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர்:

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடித்த சாதனையும் சச்சின் டெண்டுல்கர் பெயரில் உள்ளது. இவர் கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 241 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள்:

விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இருவரும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.

இன்னிங்ஸ் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி:

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை இன்னும் 44 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் உள்ளது. கடந்த 1978ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி:

கடந்த 1977ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான அடியை கொடுத்தது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி:

கடந்த 2020ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாறு படைத்தது.

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை வீரேந்திர சேவாக் படைத்துள்லார். இவர் கடந்த 2003ம் ஆண்டு 5 சிக்ஸர்கள் உதவியுடன் 195 ரன்கள் குவித்திருந்தார்.

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஆஸ்திரேலியாவில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதேபோல், 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இருக்கிறார். கடந்த 1985ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். அப்போது, கபில்தேவ் 106 ரன்கள் விட்டுகொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?