5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs AUS: அடிலெய்டு ஸ்டேடியத்தில் கலக்கல்..! விராட் கோலி படைத்த சாதனைகள் இவ்வளவா?

Virat Kohli: ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 56.03 சராசரியில் 1457 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 7 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். 2014 டிசம்பரில் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கோலி 169 ரன்களே சிறந்த டெஸ்ட் ஸ்கோர் ஆகும்.

IND vs AUS: அடிலெய்டு ஸ்டேடியத்தில் கலக்கல்..! விராட் கோலி படைத்த சாதனைகள் இவ்வளவா?
விராட் கோலி (Image: twitter and AP)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2024 22:30 PM

பார்டர் – கவாஸ்கர் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி பிங்க் பந்து போட்டியில் அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

ALSO READ: Mithali Raj: திருமணத்தை நிறுத்தியது ஏன்..? சுவாரஸ்ய கதையை சொன்ன மிதாலி ராஜ்!

கோலி சாதனை:

வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டு டெஸ்டில் அனைவரது பார்வையும் இந்திய அணியின் நட்ச்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மீதுதான் இருக்கும். விராட் கோலி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பெர்த் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்து பார்முக்கு திரும்பிய கோலி, அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கும் அதே மனநிலையுடன் திரும்புவார். மேலும், அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் கோலி இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

விராட் கோலி அடிலெய்டு ஸ்டேடியத்தில் மொத்தம் 11 போட்டிகளில் ( 4 டெஸ்ட், ஒருநாள் மற்றும் 3 டி20) விளையாடியுள்ளார். இந்த மூன்று வடிவங்களையும் சேர்த்து 73.61 சராசரியில் 957 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 சதங்களும் அடங்கும். டெஸ்டில் மூன்று சதங்களும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்களும் அடித்துள்ளார். 2014ல் டிசம்பர் மாதம் கோலி, இதே ஸ்டேடியத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் ( 115 மற்றும் 141 ) அடித்திருந்தார். கேப்டனாக கோலியின் முதல் டெஸ்ட் போட்டியாகும். இதில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 56.03 சராசரியில் 1457 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 7 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். 2014 டிசம்பரில் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கோலி 169 ரன்களே சிறந்த டெஸ்ட் ஸ்கோர் ஆகும்.

சிறந்த சுற்றுப்பயணம்:

2011-12 மற்றும் 2014-15 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவர். 2014 – 15 சுற்றுப்பயணத்தில் கோலி 4 டெஸ்ட் போட்டிகளில் 86.50 சராசரியில் 4 சதங்கள் மற்றும் அரை சதம் உள்பட 692 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய வீரர் கோலி மட்டுமே.

இந்திய மண்ணில் விராட் கோலியின் சாதனை:

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 39.18 சராசரியில் 2 சதங்கள், ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

ALSO READ: IND VS AUS: பிங்க் பால் டெஸ்ட் பற்றிய சுவாரஸ்யங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!

பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான இரு அணிகளின் விவரம்:

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட்,  ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.

Latest News