BGT 2024: இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித்.. பும்ரா புதிய கேப்டனா..?

Border–Gavaskar Trophy 2024: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டில் பெர்த்தில் வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியுடன் செல்லவில்லை.

BGT 2024: இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித்.. பும்ரா புதிய கேப்டனா..?

ரோஹித் சர்மா (Image: PTI)

Published: 

11 Nov 2024 08:22 AM

இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இந்த ஆஸ்திரேலிய அணியில் இரண்டு புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். அதாவது, இந்தியா ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு கேப்டனாக இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நாதன் மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வந்தார். இதனால், கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கிடைக்காமல் தவித்தது. இதையடுத்து, பெர்த் டெஸ்டில் உஸ்மான் கவாஜாவுடன் நாதன் மெக்ஸ்வீனி அல்லது டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. மறுபுறம், ஜோஷ் இங்கிலிஸ் முதன்முறையாக பேக்-அப் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ: IND vs SA 2nd T20I: வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்கா!

கேப்டன் யார்..?

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்பட இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாவுசாக்னே போன்ற வீரர்கள் அனுபவ பேட்ஸ்மேன்களாகவும், அலெக்ஸ் கேரி விக்கெட் கீப்பராகவும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா டவுட்:

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டில் பெர்த்தில் வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியுடன் செல்லவில்லை. இதன்மூலம், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது தெளிவாகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மாவுக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படலாம். ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக தந்தை ஆக போகிறார். ரோஹித்தின் மனைவி ரித்திகா சஜ்தேவுக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளதால், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (நவம்பர்-ஜனவரி 2025)

  1. 22-26 நவம்பர்: முதல் டெஸ்ட், பெர்த்
  2. 6-10 டிசம்பர்: இரண்டாவது டெஸ்ட், அடிலெய்டு
  3. 14- 18 டிசம்பர் : மூன்றாவது டெஸ்ட், பிரிஸ்பேன்
  4. 26-30 டிசம்பர்: நான்காவது டெஸ்ட், மெல்போர்ன்
  5. 03-07 ஜனவரி: ஐந்தாவது டெஸ்ட், சிட்னி

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.

ALSO READ: Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் இந்தியா..? எந்த அணி பங்கேற்க வாய்ப்பு..?

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) ), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பர்திஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

 

இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?