5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Most Wickets in BGT: பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள்.. டாப் 5 லிஸ்டிலும் அஸ்வின்!

Border Gavaskar Trophy: பார்டர்- காவஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். எனவே, யார் நம்பர் 1 என்பதும் இந்தத் தொடரின் மூலம் முடிவு செய்யப்படும்.

Most Wickets in BGT: பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள்.. டாப் 5 லிஸ்டிலும் அஸ்வின்!
அதிக விக்கெட்டுகள் (Image: PTI and GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Nov 2024 14:51 PM

பார்டர் – காவஸ்கர் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடர் இரு அணிகளும் மிக முக்கியமானது. தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு ஐஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தாங்க இருக்கிறார். இந்தநிலையில், பார்டர் – கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்?

நாதன் லயன்:

பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார் கடந்த 2011ம் ஆண்டு முதல் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இதுவரை 26 போட்டிகளில் விளையாடி 116 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

இந்திய அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பந்துவீச்சாளராக உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அனில் கும்ப்ளே:

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங்:

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். கடந்த 1998ம் ஆண்டு முதல் 2013 வரை இவர், 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஷேன் வார்னே:

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா:

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வின் vs லயன்:

புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் vs நாதன் லயன் தொடராக மாறலாம். ஏனெனில் இது இருவருக்கும் கடைசி பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடராக கூட இருக்கலாம். பார்டர்- காவஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். எனவே, யார் நம்பர் 1 என்பதும் இந்தத் தொடரின் மூலம் முடிவு செய்யப்படும்.

ALSO READ: Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசால்ட் செய்யுமா..? 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை எப்படி?

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 26 போட்டிகளில் விளையாடிய நாதன் லயன், 7378 பந்துகளை வீசி மொத்தம் 116 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 22 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் 7163 பந்துகளில் மொத்தம் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வினுக்கும் லயனுக்கும் இடையேயான விக்கெட் வித்தியாசம் 2 மட்டுமே உள்ளது. அதன்படி, இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்கள் முதலிடத்தை பிடித்து சாதனை படைக்கலாம். அதனால், ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான இந்த டெஸ்ட் தொடர், நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே கடும் போட்டியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

பார்டர் – கவாஸ்கர் டிராபிக்காக இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

காத்திருப்பு வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

 

Latest News