5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Border-Gavaskar Trophy: பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்.. இங்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார்?

BGT 2024-25: கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது அதே பெர்த் மைதானத்தில் இந்திய அணி தொடரின் முதல் போட்டியை விளையாடவுள்ளது. 2018ல் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்த்து, தொடரை சிறப்பாக துவக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

Border-Gavaskar Trophy: பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்.. இங்கு அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார்?
சச்சின் – டிராவிட் மற்றும் லட்சுமண் (getty)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 15 Nov 2024 17:04 PM

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதன்பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் ஸ்டேடியத்தில் வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. உண்மையில் சொல்லபோனால் இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணிக்கு ராசியில்லாத ஸ்டேடியம் என்றே சொல்லலாம். இங்கு இதற்கு முன்பு, இந்திய அணி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 2018 ம் ஆண்டில் விளையாடியது. அதிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது அதே பெர்த் மைதானத்தில் இந்திய அணி தொடரின் முதல் போட்டியை விளையாடவுள்ளது. 2018ல் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்த்து, தொடரை சிறப்பாக துவக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் கேப்டனாக விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாள்அர் ஜஸ்பிரித் பும்ரா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்திய கேப்டனா..?

பெர்த் ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர்:

பெர்த்தில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். கடந்த 1992ம் ஆண்டு பெர்த் ஸ்டேடியத்தில் முதல் போட்டியில் களமிறங்கிய சச்சின், கடைசியாக 2012ம் ஆண்டு விளையாடினார். இந்த ஸ்டேடியத்தில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் சச்சின் டெண்டுல்கர் 37.66 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார். இங்கு சச்சினின் அதிகபட்ச ஸ்கோர் 226 ரன்கள் ஆகும்.

மொஹிந்தர் அமர்நாத்:

பெர்த் ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் மொஹிந்தர் அமர்நாத் 2வது இடத்தில் உள்ளார். 1977ம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 95 சராசரியில் 190 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இங்கு அமர்நாத்தின் அதிகபட்ச ஸ்கோர் 100 ரன்கள் ஆகும்.

ராகுல் டிராவிட்:

பெர்த் ஸ்டேடியத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் உள்ளார். டிராவிட் இந்த ஸ்டேடியத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களில் 38 சராசரியில் 152 ரன்கள் எடுத்தார். இங்கு ராகுல் டிராவிட்டின் சிறந்த ஸ்கோர் 93 ரன்கள் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட் 1,166 ரன்கள் எடுத்துள்ளார்.

விவிஎஸ் லட்சுமணன்:

பெர்த்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விவிஎஸ் லட்சுமண் 4வது இடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு இங்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விவிஎஸ் லட்சுமண், 2012 ம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கு விளையாடினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் லட்சுமண் 34.24 சராசரியில் ஒரு அரைசதம் உள்பட 127 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு இவரது அதிகபட்ச ஸ்கோர் 79 ரன்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் லட்சுமண் 15 டெஸ்ட் போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் 1,236 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Latest News