BGT 2024-25: நாளை முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி.. 3 அமர்வுகள் என வெளியான முதல் டெஸ்ட் டைமிங்!
India vs Australia 1st Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் அமர்வு நேரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்காத சூழ்நிலையில், கேப்டனாக பும்ரா பதவி வகிக்க இருக்கிறார். இந்தநிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் அமர்வு நேரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.
ALSO READ: Border Gavaskar Trophy: கடந்த 5 தொடர்களில் 4ல் வெற்றி.. இந்தியா – ஆஸ்திரேலியா இதுவரை நேருக்குநேர்!
போட்டி அமர்வு அட்டவணை என்ன..?
- முதல் அமர்வு காலை 7.50 மணி முதல் 9.50 மணி வரை நடைபெறும்.
- மதிய உணவு இடைவேளை காலை 9.50 முதல் 10.30 மணி வரை இருக்கும்.
- இரண்டாவது அமர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
- மதியம் 12.30 மணி முதல் 12.50 மணி வரை தேநீர் இடைவேளை இருக்கும்.
- மூன்றாவது மற்றும் கடைசி அமர்வு மதியம் 12.50 மணி முதல் 2.50 மணி வரை நடைபெறும்.
இது முதல் டெஸ்ட் போட்டியின் நேரங்கள் மட்டுமே. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும். இதை தொடர்ந்து, பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கும், மெல்போர்னில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கும், சிட்னி நடைபெறும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கும் நடைபெற இருக்கிறது.
ITS BORDER GAVASKAR TROPHY TIME.
– Captain Jasprit Bumrah and Pat Cummins with the trophy. 😍🇮🇳 pic.twitter.com/BEc2yzr7oO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 21, 2024
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அட்டவணை:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி (நவம்பர்-ஜனவரி 2025)
- முதல் டெஸ்ட், பெர்த் – (22-26 நவம்பர்)
- இரண்டாவது டெஸ்ட், அடிலெய்டு – (6-10 டிசம்பர்)
- மூன்றாவது டெஸ்ட், பிரிஸ்பேன் – (14- 18 டிசம்பர்)
- நான்காவது டெஸ்ட், மெல்போர்ன் – (26-30 டிசம்பர்)
- ஐந்தாவது டெஸ்ட், சிட்னி – (03-07 ஜனவரி 2025)
பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான இரு அணிகளின் விவரம்:
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பர்திஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
டெஸ்ட் வடிவத்தில் கேப்டனாக பும்ரா எப்படி..?
கடந்த 2022ம் ஆண்டு இந்திய அணி கேப்டனாக பும்ரா ஒருமுறை பதவி வகித்தார். இந்திய அணி 2022ம் ஆண்டு இங்கிலாந்து எதிராக கைவிடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியை மீண்டும் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்போது, ரோஹித் சர்மா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெர்த்தில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா எப்படி கேப்டனாக செயல்படுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.