5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

BGT 2024-25: இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இந்த தொடர் முதன்முறையாக 1996ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்தநிலையில், வருகின்ற 22ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பல வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைக்கவுள்ளனர்.

Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!
பார்டர் – கவாஸ்கர் டிராபி (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2024 19:21 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0- 3 என்ற கணக்கில் இழந்ததற்கு பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இந்த தொடர் முதன்முறையாக 1996ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்தநிலையில், வருகின்ற 22ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பல வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைக்கவுள்ளனர். அது என்ன சாதனை, யார் படைக்க போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: On This Day in 2024: ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள்.. இதே நாளில் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா!

2000 ரன்கள்:

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 42 இன்னிங்ஸ்களில் 48.26 சராசரியுடன் 1,979 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 21 ரன்கள் மட்டும் எடுத்தால் 2,000 ரன்களை கடந்து செல்வார்.

இதன்மூலம், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 2000 ரன்களை கடந்த 7வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார். மேலும், சேட்டேஷ்வர் புஜாரா (2,033), மைக்கேல் கிளார்க் (2,049), ராகுல் டிராவிட் (2,143) ஆகியோரின் ரன்கள் எண்ணிக்கையையும் முந்தவும் விராட் கோலிக்கு வாய்ப்புள்ளது.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3,262 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

அதிக சதங்கள்:

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் கோலி இதுவரை 8 சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் மேலும் 2 சதங்கள் அடித்தால், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். தற்போது இந்த டிராபியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் 9 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ரிக்கி பாண்டிங் மற்றும் கோலி தலா 8 சதங்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் கிளார்க் 7 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் மற்றொரு சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது, சச்சின் – கோலி தலா 6 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

3000 ரன்கள்:

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், வருகின்ற 5 டெஸ்ட் போட்டிகளில் 307 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை தனது டெஸ்ட் வாழ்க்கையில் கடப்பார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் மகேந்திர சிங் தோனி மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் (4,876 ரன்கள்) மட்டுமே 3,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.40 சராசரியில் 624 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள்:

ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக வீழ்த்திய சாதனையை படைப்பார். தற்போது வரை அஸ்வின் 22 போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 116 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

100 விக்கெட்டுகள்:

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இவர் இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலகின் 15வது பேட்ஸ்மேன்:

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் 315 ரன்கள் எடுத்தால், அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 10,000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்த உலகின் 15வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும், ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 4வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ஸ்டீவ் ஸ்மித் படைப்பார்.

ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 109 போட்டிகளில் 195 இன்னிங்ஸ்களில் 9,685 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் இவரா..? அப்போ! விராட் கோலி எத்தனையாவது இடம்?

50 விக்கெட்டுகள்:

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வருகின்ற பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இன்னும் விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியாவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை நிறைவு செய்வார்.

1000 ரன்கள்:

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷாக்னே 25 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு எதிராக 1,000 ரன்களை நிறைவு செய்வார்.

 

Latest News