5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்திய கேப்டனா..?

BGT 2024-25: ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னாள் கேப்டன்கள் தலைமையில் அந்தந்த அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றாலும், இவர்களின் தலைமையில் கீழ் அணிகள் குறைந்த வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே, இந்த கேப்டன்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக வெற்றிகள்.. முதலிடத்தில் இந்திய கேப்டனா..?
டெஸ்ட் கேப்டன்கள் (Image: social media)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 14 Nov 2024 17:52 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் டிராபியின் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 22ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த பார்டர் – கவாஸ்கர் டிராபி இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும். இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். எனவே, இந்தியா – ஆஸ்திரேலிய என இரு அணிகளும் எளிதில் தோல்வியை விட்டுகொடுக்காது. கடந்த 1996ம் ஆண்டு முதல் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் பல பேட்ஸ்மேன்கள், பல பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

அந்தவகையில், இன்று இந்த டிராபி தொடரில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அதிக வெற்றியை பதிவு செய்த கேப்டன்கள்:

எம்.எஸ்.தோனி (இந்தியா):

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ்.தோனி, பார்டர் – கவாஸ்கர் டிராபியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். தோனி தலைமையில் இந்திய அணிக்கு 2012 – 12ல் ஆஸ்திரேலியாவில் ஒரு தொடர் வெற்றி உட்பட பல முக்கிய வெற்றிகளை பதிவு செய்துள்ளார். பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்காக தோனி, 13 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில், இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

ஸ்டீவ் வா (ஆஸ்திரேலியா):

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வா 1990ன் பிற்பகுதியிலும், 2000 களின் முற்பகுதியிலும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார். ஸ்டீவ் வா தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் பல பார்டர் – கவாஸ்கர் டிராபியில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் வா தலைமையில் ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரத்தில் 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா):

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம். இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 5 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் ஆஸ்திரேலிய அணி சந்தித்துள்ளது.

விராட் கோலி (இந்தியா):

எம்.எஸ்.தோனியின் அமைதியான கேப்டன்சிக்கு பிறகு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வித்தியாசமான அணுகுமுறையை டெஸ்ட் போட்டியில் கையாண்டது. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் அவரது சாதனை கலவையாக இருந்தாலும், கேப்டனாக 3 போட்டிகளை டிரா செய்துள்ளார். விராட் கோலி தலைமையின் கீழ்தான், இந்திய அணி கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்று வரலாறு படைத்தது.

சவுரவ் கங்குலி:

இந்திய கிரிக்கெட் அணியின் வடிவத்தை முழுமையாக மாற்றிய பெருமை சவுரவ் கங்குலிக்கு உண்டு. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளில் களமிறங்கியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும், 3 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. சவுரவ் கங்குலியின் அச்சமற்ற கேப்டன்சி பார்டர்-கவாஸ்கர் வரலாற்றில் முக்கிய கேப்டன்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

அஜிங்க்யா ரஹானே:

விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. உண்மையில், விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக அஜிங்க்யா ரஹானே இருந்திருக்க வேண்டும்.

ALSO READ:Border Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் இவரா..? அப்போ! விராட் கோலி எத்தனையாவது இடம்?

ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னாள் கேப்டன்கள் தலைமையில் அந்தந்த அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றாலும், இவர்களின் தலைமையில் கீழ் அணிகள் குறைந்த வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே, இந்த கேப்டன்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

 

Latest News