IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்?
Border-Gavaskar Trophy 2024: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ரோஹித் படை வெல்ல வேண்டும்.
சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகின்ற நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் முறையே பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய ஸ்டேடியங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் கடைசி இரண்டு சுற்றுப்பயணங்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், இந்த முறையும் இதேபோன்ற வெற்றியை பெற வேண்டும் என இந்திய அணி முயர்சிக்கும். இதுபோக, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் ரோஹித் படை வெல்ல வேண்டும். எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைக் கருத்தில் கொண்டு இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவது முக்கியம்.
பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இதுவரை இரு அணிகளும்:
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதுவரை 16 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி அதிகபட்சமாக 10 டெஸ்ட் தொடர்களையும், ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. மேலும், 1 டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்துள்ளது. அந்தவகையில், இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்..
முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பும்ரா:
வருகின்ற நவம்பர் 22 ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்கள் காரணமாக இடம்பெறமாட்டார். இதையடுத்து, இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்குகிறது..?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறுகிறது?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 (வெள்ளிக்கிழமை) காலை 7:50 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எந்த டிவி சேனலில் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியை எந்த டிஜிட்டல் தளத்தில் பார்க்கலாம்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை டிஸ்னி + ஹாட்ஸ்டார் என்ற ஒடிடி டிஜிட்டல் தளத்தில் கண்டு களிக்கலாம்.
இரண்டு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
காத்திருப்பு வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.