5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND VS AUS: பிங்க் பால் டெஸ்ட் பற்றிய சுவாரஸ்யங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!

IND vs AUS Pink Ball Test: டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 10 அணிகளுக்கு இடையே மொத்தம் 22 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், மொத்தம் 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த சத பட்டியலில் இந்திய தரப்பில் இருந்து 1 சதம் மட்டுமே பதிவாகியுள்ளது. 2019 நவம்பரில வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலி அடித்த ஒரே சதம் இதுவாகும்.

IND VS AUS: பிங்க் பால் டெஸ்ட் பற்றிய சுவாரஸ்யங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா!
இந்தியா – ஆஸ்திரேலியா (Image: BCCI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Dec 2024 14:59 PM

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் பார்டர் – கவாஸ்கர் டிராபியின் கீழ் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போது இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக விளையாடப்பட இருக்கிறது.

இந்த போட்டியானது வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் பிங்க் பந்தில் விளையாடப்பட இருக்கிறது. இந்தநிலையில், பிங்க் டெஸ்ட் போட்டியை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: PV Sindhu Marriage: மணமகளாகப்போகும் பி.வி.சிந்து.. விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யார்?

இந்திய அணி இதுவரை எத்தனை பிங்க் பால் டெஸ்டில் விளையாடியுள்ளது..?

பிங்க் பால் டெஸ்ட் போட்டியின் வரலாறு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பழமையாது. கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்தவகையில், இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. 4 போட்டிகளில் இந்திய அணி 3ல் வெற்றியும், 1ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இந்த ஒரு தோல்வியும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே வந்தது.

பிங்க் பந்து பற்றி 5 சுவாரஸ்ய தகவல்கள்:

  • இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் 23வது பிங்க் பால் டெஸ்ட் போட்டியாகும். இதில், இதுவரை விளையாடிய அனைத்து 22 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. போட்டி டிராவிலோ, முடிவில்லாமலோ முடிந்தது இல்லை.
  • கடந்த 22 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகள் மட்டுமே 5வது நாள் வரை நடந்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் இரண்டே நாட்களில் வெளிவந்துள்ளன.
  • பிங்க் பால் டெஸ்ட் விளையாடுவதில் அதிக அனுபவம் வாய்ந்த அணியுடன் அடிலெய்டில் இந்தியா வருகின்ற டிசம்பர் 6ம் தேதி மோதுகிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டுமே.
  • கடந்த 2020 டிசம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் , இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்குள் சுருண்டது. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தவகையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிங்க் பால் டெஸ்டில் இரண்டாவது முறையாக மோதுகின்றன.
  • ஆஸ்திரேலியாவும் பிங்க் பால் டெஸ்டில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 12 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11ல் வெற்றியும், 1ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதே ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது.

பிங்க் பால் டெஸ்ட்டில் அதிக சதங்கள்:

டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 10 அணிகளுக்கு இடையே மொத்தம் 22 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், மொத்தம் 27 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த சத பட்டியலில் இந்திய தரப்பில் இருந்து 1 சதம் மட்டுமே பதிவாகியுள்ளது. 2019 நவம்பரில வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலி அடித்த ஒரே சதம் இதுவாகும். கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் கோலி 136 ரன்கள் குவித்தார்.

ALSO READ: Exclusive: பாரா ஒலிம்பிக் வாலிபால்.. கெத்து காட்டும் தமிழக வீரர் நிபில் கிப்சன்!

அதேசமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் இதுவரை 11 சதங்கள் அடித்துள்ளனர். அதாவது, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே 4 சதங்களும், டிராவிஸ் ஹெட் 2 சதங்களும் அடித்துள்ளனர். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 1 சதம் அடித்துள்ளனர்.

இரு அணிகளின் விவரம்:

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட்,  ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.

Latest News