5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

India Team BGT: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. ரோஹித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய நிலையில், இதற்கிடையில் பிசிசிஐ அணியை அறிவித்தது. அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஷமியை தேர்வு செய்வதில்லை என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருந்துள்ளார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்.

India Team BGT: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. ரோஹித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..
கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter)
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 26 Oct 2024 09:13 AM

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 18 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்காக தேர்வுக் குழு சில பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டாலும், கே.எல்.ராகுல் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க ஆட்டக்காரராக இடம் பெற்றுள்ளார். உடற்தகுதியுடன் போராடி வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த தொடர் தவிர தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒருபுறம், புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய நிலையில், இதற்கிடையில் பிசிசிஐ அணியை அறிவித்தது. அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஷமியை தேர்வு செய்வதில்லை என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருந்துள்ளார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். குல்தீப் நீண்ட நாட்களாக இடுப்புப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும், அதைக் குணப்படுத்த பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் குல்தீப் பணியாற்றுவார் என்றும் பிசிசிஐ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், அக்சர் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க: 26 நாட்களுக்கு பின் ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. அதிகாலையில் ராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..

அபிமன்யு ஈஸ்வரனுக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பு:

இந்திய ஏ அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிதுராஜ் கெய்க்வாட் இந்த பதவியை பெறுவார் என்று பல கூற்றுக்கள் கூறப்பட்டன ஆனால் அது நடக்கவில்லை. ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பையில் சதம் அடித்த பெங்கால் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இறுதியாக இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆல்ரவுண்ட் மூலம் அசத்திய இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கும் முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரைத் தவிர வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார். மறுபுறம், கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஷர்துல் தாக்கூர் இந்த முறை அணியில் இடம்பெற மாட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (Wk), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க:  300 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி.. தோல்வி பயத்தில் இந்திய அணி..!

இந்த தொடருக்கு முன், இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் பங்கேற்க உள்ளது, நவம்பர் 8ம் தேதி தொடங்கி 4 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரமன்தீப் சிங், விஜய்குமார் வைஷாக் ஆகியோருக்கும் முதல்முறையாக இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக் தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார், அதே நேரத்தில் காயம் காரணமாக சிவம் துபே மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரும் தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Latest News