5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs AUS: கத்தி முனையில் நிற்கும் 4 இந்திய வீரர்கள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் கடைசியா..?

BGT 2025: சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததுதான். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சில அனுபவ வீரர்களின் எதிர்காலம் இருக்கிறது. இதில், இவர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் ஓய்வு பெற வேண்டியதுதான். இந்தநிலையில், யார் இந்த வீரர்கள் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

IND vs AUS: கத்தி முனையில் நிற்கும் 4 இந்திய வீரர்கள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் கடைசியா..?
இந்திய அணி (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 05 Nov 2024 22:04 PM

இன்னும் சில நாட்களில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இம்முறை இரு அணிகளுக்கும் இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடர் நடைபெறவுள்ளது. இந்திய அணி ஒவ்வொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், இந்த முறை இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததுதான். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சில அனுபவ வீரர்களின் எதிர்காலம் இருக்கிறது. இதில், இவர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் ஓய்வு பெற வேண்டியதுதான். இந்தநிலையில், யார் இந்த வீரர்கள் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

ALSO READ: Border–Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியின் வரலாறு என்ன? எந்த அணி அதிக வெற்றி? முழு விவரம் இங்கே!

விராட் கோலி:

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 34-35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக, விராட் கோலியின் சராசரி 55 இலிருந்து 48க்கு கீழ் குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், விராட் 25 இன்னிங்ஸில் 54 சராசரியுடன் 1352 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 6 சதங்களும் அடங்கும். வருகின்ற ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்றால், ஓய்வு பெற வேண்டியதுதான்.

ரோஹித் சர்மா:

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால், தற்போது ஓய்வு பெறுவதற்கான ஆலோசனைகளையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது. வருகின்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை எனில், ஓய்வை அறிவிக்கலாம். ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் சர்மா இதுவரை 7 போட்டிகளில் 31.38 சராசரியில் 408 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. 3 அரை சதங்கள் மட்டுமே வந்துள்ளது. எனவே, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் ரோஹித்துக்கு எளிதானதாக இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

ரவீந்திர ஜடேஜா:

கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 56 இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 48 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், 2021க்கு பிறகு, ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 8 போட்டிகளில் பங்கேற்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், பேட்டிங்கில் பெரிதாக செயல்படவில்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3.31 என்ற எகானமி விகிதத்துடன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4.12 என்ற எகானமியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், நியூசிலாந்து தொடரில் 3,79 என்ற எகானமியுடன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ALSO READ: Team India: இந்திய அணி அடுத்ததாக யாருடன் எப்போது மோதுகிறது? முழு விவரம் இங்கே!

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 530 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருந்தாலும், பேட்டிங்கில் 8வது இடத்தில் களமிறங்கி 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் உள்பட 1977 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், அஸ்வின் 6வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து 2 சதங்கள் உட்பட 35.40 சராசரியில் 531 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியவில்லை. இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வருகின்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின், சிறப்பாக ஆடவில்லை எனில் இது இவருக்கு கடைசி டெஸ்ட் தொடராக கூட இருக்கலாம்.

வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்த வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், யாருக்கும் தெரியும் இதுவே இவர்களது கடைசி டெஸ்ட் தொடராகவும் இருக்கலாம்.

Latest News