IND vs AUS 2nd Test: 5 வீரர்களுக்கு இது முதல் பிங்க் பால் டெஸ்ட்.. கலக்க காத்திருக்கும் இளம் வீரர்கள்!
Border Gavaskar Trophy: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியையும், 1 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மேலும், இந்திய அணி தோற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து வந்தது.
பார்டர் – கவாஸ்கர் தொடரின் பிங்க் பால் டெஸ்ட் போட்டியை காண இந்திய ரசிகர்களும், ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் 5 வீரர்கள் முதன்முறையாக பிங்க் பந்து டெஸ்டில் விளையாட இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட் முதலாவது போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இந்திய அணி குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதுவும் செய்யாது. அப்படி நடந்தால், 5 வீரர்கள் முதன்முறையாக தங்களது பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பை பெறலாம். அதன்படி, தொடக்க வீரர் யஷஸ்வி கெய்ஸ்வால், கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்கள் முதன்முறையாக பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
ரோஹித் சர்மா மீண்டும் களம்:
தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத சுப்மன் கில் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கலாம். அதேநேரத்தில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் பெஞ்சில் அமர வைக்கப்படலாம்.
பிங்க் பால் டெஸ்டில் இந்திய அணியின் சாதனை என்ன..?
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை 4 பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியையும், 1 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மேலும், இந்திய அணி தோற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வென்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்றது. அதாவது, பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்றி பெற்றால், இந்திய அணி வென்ற வெளிநாட்டு பிங்க் பந்து டெஸ்ட் வெற்றியாக இது அமையும். பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி ஆஸ்திரேலியா பிஎம் லெவன் அணியுடன் வருகின்ற 2ம் தேதி பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ALSO READ: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!
மீதமுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை:
- இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்டு (இந்திய நேரப்படி காலை 9:30 மணி) – பிங்க் பால் டெஸ்ட் போட்டி
- இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பிரிஸ்பேன் (இந்திய நேரப்படி காலை 5:50 மணி
- இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் (இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி)
- இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 2-7, சிட்னி (இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி)
பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான இரு அணிகளின் விவரம்:
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.