Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசால்ட் செய்யுமா..? 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை எப்படி?

BGT 2024-25: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. இதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டிலும், 3வது டெஸ்ட் பிரிஸ்பேனிலும், 4வது டெஸ்ட் மெல்போர்னிலும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெறுகிறது.

Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசால்ட் செய்யுமா..? 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை எப்படி?

இந்திய அணி (Image: PTI)

Published: 

17 Nov 2024 16:31 PM

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வருகின்ற நவம்பர் 22ம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடந்த 4 பார்டர் – கவாஸ்கர் டிராபியையும் இந்திய அணியே வென்றுள்ளது. இந்தநிலையில், தற்போது பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாடவுள்ள 5 ஸ்டேடியங்களில் இந்திய அணியின் சாதனை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. இதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டிலும், 3வது டெஸ்ட் பிரிஸ்பேனிலும், 4வது டெஸ்ட் மெல்போர்னிலும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெறுகிறது.

ALSO READ: IPL 2025 Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் 13வயது கிரிக்கெட் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?

பெர்த் ஸ்டேடியம்:

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 123 ரன்கள் எடுத்திருந்தார்.

அடிலெய்டு டெஸ்ட்:

அடிலெய்டில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் இந்தியா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், 8 போட்டிகளில் தோல்வியும், 3 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. கடந்த சுற்றுப்பயணத்தில், இதே ஸ்டேடியத்தில் நடந்த பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. மேலும், இந்த ஸ்டேடியத்தில் ஒரு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை.

பிரிஸ்பேன்:

பிரிஸ்பேனில் உள்ள கபா ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில், 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. கடந்த 2020 – 21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்து, 32 ஆண்டுகளுக்கு பிறகு கபாவில் ஆஸ்திரேலியாவின் பெருமையை உடைத்தது.

மெல்போர்ன் ஸ்டேடியம்:

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி அதிகபட்சமாக 4 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. கடந்த 1977-78ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் வெற்றியை இங்கு பதிவு செய்தது. அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இந்திய அணி இந்த ஸ்டேடியத்தில் கடந்த 2011ம் ஆண்டு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 13 ஆண்டுகளாக இங்கு எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை.

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

சிட்னி:

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போட்டியை டிரா செய்தது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமான் விஹாரி காயத்துடன் அபாரமாக பேட்டிங் செய்து டிரா செய்தனர். இந்திய அணி இதுவரை சிட்னியில் 13 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 5 தோல்வி, 7 போட்டிகளை டிரா செய்துள்ளது. கடந்த 1978ம் ஆண்டு இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு, கடந்த 46 ஆண்டுகளாக இங்கு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவில்லை.

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை (நவம்பர் 2024-ஜனவரி 2025

  • முதல் டெஸ்ட், பெர்த் ( 22-26 நவம்பர்)
  • இரண்டாவது டெஸ்ட், அடிலெய்டு (6-10 டிசம்பர்)
  • மூன்றாவது டெஸ்ட், பிரிஸ்பேன் (14- 18 டிசம்பர்)
  • நான்காவது டெஸ்ட், மெல்போர்ன் (26-30 டிசம்பர்)
  •  ஐந்தாவது டெஸ்ட், சிட்னி (03-07 ஜனவரி – 2025)
புடவையில் சொக்க வைக்கும் நடிகை அஞ்சலி
அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷிற்கு டும் டும் டும்?
தமிழ் சீரியல்களின் டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ
தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?