India vs Australia 2nd Test: இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பிங்க் பால் டெஸ்ட் எப்போது..? ரோஹித் சர்மா களமிறங்குவாரா?

BGT 2024-25: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது 5வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் விளையாட உள்ளது. இந்தியா இதுவரை மொத்தம் 4 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

India vs Australia 2nd Test: இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பிங்க் பால் டெஸ்ட் எப்போது..? ரோஹித் சர்மா களமிறங்குவாரா?

இந்தியா - ஆஸ்திரேலியா பிங்க் டெஸ்ட் (Image: BCCI)

Published: 

26 Nov 2024 17:41 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 22ம் தேதி தொடங்கியது. பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.

ALSO READ: AUS vs IND: சோனமுத்தா போச்சா.. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

இரண்டாவது டெஸ்ட் போட்டி எப்போது..?

பார்டர் – கவாஸ்கர் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. அதாவது, இந்த டெஸ்ட் போட்டியானது பகல் – இரவு போட்டியாக நடைபெற இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு பந்துக்கு பதிலாக பிங்க் பந்து பயன்படுத்தப்படும். கடந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்க இருக்கிறார்.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. தற்போது, ரோஹித் சர்மா அணியில் இணைந்திருப்பதால், கேப்டன் பதவியுடன் விளையாடும் லெவனில் களமிறங்குவார். ஹிட் மேன் ரோஹித் சர்மா வருகையால் முதல் போட்டியில் விளையாடிய தேவ்தத் படிக்கல் அல்லது துருவ் ஜூரல் நீக்கப்படலாம்.

இந்நிலையில், டிசம்பர் 6 முதல் 10 வரை அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, பிஎம்ஸ் லெவன் அணியுடன் இந்திய அணி வருகின்ற நவம்பர் 30 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

இந்திய அணிக்கு இது 5வது பிங்க் பால் டெஸ்ட்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது 5வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் விளையாட உள்ளது. இந்தியா இதுவரை மொத்தம் 4 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

இந்தியா தனது சொந்த ஸ்டேடியத்தில் விளையாடிய 3 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய ஒரேயோரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தனது முதல் பிங்க் பால் டெஸ்ட் (பகல் – இரவு) போட்டியை 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியது. இதில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ALSO READ: IPL Auction Player List 2025: சென்னை முதல் பஞ்சாப் வரை.. எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்? முழு பட்டியல்!

பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான இரு அணிகளின் விவரம்:

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யாசவி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளின் அட்டவணை:

  1. இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்டு (இந்திய நேரப்படி காலை 9:30 மணி)
  2. இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பிரிஸ்பேன் (இந்திய நேரப்படி காலை 5:50 மணி)
  3. இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன் (இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி)
  4. இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 2-7, சிட்னி (இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி)

 

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்