Brett Lee Birthday: டி20 வரலாற்றில் முதல் ஹாட்ரிக்.. பீமர் வீசுவதில் கில்லாடி.. அதிவேக பிரட் லீ பெஸ்ட் மொமெண்ட்ஸ்!
Brett Lee: ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீயின் வேகப்பந்தால் பல பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்றார்கள் என்று சொல்லலாம். பிரட் லீ தனது ஆபத்தான யார்க்கர் பந்துகளால் மிகவும் பிரபலமடைந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பல முறை பீமர் பந்துகளை வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார்.
உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரட் லீ கடந்த 1976ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பாப் மற்றும் தாயின் பெயர் ஹெலன் ஆகும். பிரட் லீ தனது ஆரம்ப கல்வியை பல்ராங் பள்ளி மற்றும் ஓட்ஸ் உயர்நிலை பள்ளியில் முடித்தார். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிரட் லீ, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ALSO READ: IND vs SA 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்?
பிரட் லீயின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒன்று. ஆஸ்திரேலிய அணி இந்த பெயரை பெறுவதற்கு பிரட் லீயும் ஒரு காரணம். பிரட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளையும், 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 380 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Happy Birthday @BrettLee_58
380 ODI , 310 Test & 28 ODI Wickets.
2003 WC , 2006 & 2009 CT Champions.One of the fastest Bowler of all time.
Let’s Relive his debut match against India. pic.twitter.com/B0gQE8QIkj
— alekhaNikun (@nikun28) November 8, 2024
பீமர் வீசுவதில் கில்லாடி:
ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீயின் வேகப்பந்தால் பல பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்றார்கள் என்று சொல்லலாம். பிரட் லீ தனது ஆபத்தான யார்க்கர் பந்துகளால் மிகவும் பிரபலமடைந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பல முறை பீமர் பந்துகளை வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார். பீமர் வீசுவது சர்வதேச கிரிக்கெட்டில் அனுமதி இல்லை என்றாலும், மிகவும் நேக்குபோக்காக வீசுவார். அதாவது, பிரட் லீ பந்து பதன் கையிலிருந்து நழுவி, பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் செல்வதுபோல் வீசுவார். பீமரின் அதிவேகத்தில் பயந்து, அடுத்த இரண்டு மூன்று பந்துகளில் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை பயத்தில் இழந்துவிடுவார்கள்.
சச்சினுக்கு தண்ணீர் காட்டிய பிரட் லீ:
உலகில் பல பந்துவீச்சாளர் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்ய முடியாமல் திணறிய காலம் உண்டு. ஆனால், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை பல முறை அவுட் செய்து வெளியேற்றியுள்ளார் பிரட் லீ. அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 14 முறை சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்துள்ளார் பிரட் லீ. இருப்பினும், சச்சின் டெண்டுல்கர் குறித்து ஒரு பேட்டியில் பேசிய பிரட் லீ, “ சச்சினுக்கு பந்துவீசுவது தனக்கு ஒருபோதும் எளிதானது அல்ல, தலைவலியாக இருந்துள்ளது” என தெரிவித்தார்.
சர்வதேச டி20 போட்டியில் முதல் ஹாட்ரிக்:
கடந்த 2003ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு முக்கிய காரணம் பிரட் லீ என்றே கூறலாம். அந்த உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுமட்டுமின்றி, கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் அலோக் கபாலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலும், டி20 உலகக் கோப்பையிலும் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பிரட் லீக்கு பெற்று தந்தது.
ALSO READ: Watch Video: கேப்டனுடன் கடும் வாக்குவாதம்.. போட்டிக்கு நடுவே வெளியேறிய அல்சாரி ஜோசப்..!
அதிவேகம்:
2005 ஆம் ஆண்டு நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக மணிக்கு 160.8 கிமீ வேகத்தில் பந்து வீசியவர் பிரட் லீ. இது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பந்துவீசிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரட் லீக்கு பெற்றார். பிரட் லீக்கு முன்பு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்து வீசி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் 161.1 கிமீ வேகத்தில் பந்து வீசி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.