Virat kohli: ஓய்வுக்கு பிறகு என்னை பார்க்க முடியாது – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்னை யாரும் காண முடியாது என்று கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Virat kohli: ஓய்வுக்கு பிறகு என்னை பார்க்க முடியாது - விராட் கோலி

ஓய்வுக்கு பிறகு என்னை பார்க்க முடியாது - விராட் கோலி

Updated On: 

17 May 2024 02:20 AM

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்த விழா ஒன்று நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆர்.சி.பி அணியின் வீரர்கள் பங்கேற்றனர். கேப்டன் டூப்ளசியுடன் மேடையில் தோன்றிய விராட் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார். நடப்பு 2024 ஐபிஎல் சீசனில் 661 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலி உணர்வுப்பூர்வமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வந்த விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மீது ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். அப்படி விமர்சனம் செய்த அனைவருக்கும் தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 13 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் உட்பட 661 ரன்களை பெற்று அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சந்தித்த ஒரு பிரச்சினையை தான் தற்போது, விராட் கோலியும் சந்தித்து வருகிறார். வயதாகி வரும் சூழலில் எப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

விராட் கோலி ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி வருவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சாதகமாக உள்ளது. விராட் கோலியிடம் உங்களது கிரிக்கெட் நாளுக்கு நாள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, “அது ரொம்ப சிம்பிள். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது கேரியரில் முடிவு என்பது இருக்கும் வேண்டும். அதை கருத்தில் கொண்டு எப்போதும் நான் செயல்படுகிறேன். ஓய்வுக்குப் பிறகு என்னால் அது முடியவில்லையே என நான் வருத்தமடைய விரும்பவில்லை. அதனால் நான் ஆடுகின்ற காலம் வரை எனது முழு பலத்தையும் கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவேன் என்றும், ஓய்வை அறிவித்த பிறகு சில காலம் என்னைப் பார்க்க முடியாது என்று விராட் கூறியுள்ளார்.

Also Read: Sunil Chhetri Retirement :இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு.. அதிர்ச்சி ரசிகர்கள்.!

35 வயதான விராட் கோலி, கடந்த 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது, உலக கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள விராட் கோலியின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!