Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் இந்தியா..? எந்த அணி பங்கேற்க வாய்ப்பு..?

BCCI: சாம்பியன் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என மத்திய அரசிடம் இருந்து இந்திய அணிக்கு உத்தரவு வந்துள்ளதாகவும், எனவே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்றும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் இந்தியா..? எந்த அணி பங்கேற்க வாய்ப்பு..?

இந்தியா - பாகிஸ்தான் (Image: Twitter)

Updated On: 

10 Nov 2024 19:59 PM

வருகின்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன் டிராபியில் விளையாட இந்திய அணி தயக்கம் காட்டி வருகிறது. மேலும், ஹைபிரிட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டால் மட்டுமே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடல் முறையில் நடத்த மாட்டோம் என உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சாம்பியன் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என மத்திய அரசிடம் இருந்து இந்திய அணிக்கு உத்தரவு வந்துள்ளதாகவும், எனவே இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்றும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

ALSO READ: AUS vs PAK: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட பாகிஸ்தான் அணி.. 6 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை!

பாகிஸ்தானுக்கு சிக்கல்:

பிசிசிஐ இப்படியான கடிதத்தை எழுதியதன் மூலம் சாம்பியன் டிராபி போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படலாம். இதன் காரணமாக, பிசிசிஐ கேட்கும் வழிமுறைகளை பின்பற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி அறிவுறுத்தலாம்.

ஹைப்ரிட் மாடல்:

இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபியானது ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படலாம். இதன்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம். மற்ற அணிகளின் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறலாம். இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால், இறுதிப் போட்டியும் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம்.

கம் அண்ட் கோ:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன் உள்ள இரண்டாவது விருப்பம் கம் அண்ட் கோ. அதாவது, இந்திய அணி தாங்கள் விளையாடப்போகும் ஒவ்வொரு போட்டிக்கும் பாகிஸ்தானுக்கு சென்று போட்டியில் விளையாடும். போட்டி முடிந்ததும் இந்திய அணி மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும். இதற்காகவே, இந்திய அணியின் போட்டிகள் அனைத்தும் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த முடிவு ஏன் என்றால் பஞ்சாபில் உள்ள சண்டிகர் மற்றும் லாகூர் இடையே உள்ள தூரம் 246 கிலோமீட்டர்கள் மட்டுமே. லாகூர் மற்றும் சண்டிகர் நகரங்களிலும் விமான நிலையங்கள் உள்ளன. இதனால்தான், இந்தியாவின் போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பிசிபியின் கூற்றுப்படி, இந்திய அணி தனது போட்டிகளுக்காக நேரடியாக லாகூர் வந்து போட்டிக்குப் பிறகு சண்டிகர் அல்லது டெல்லிக்கு திரும்பலாம்.

ALSO READ: Watch Video: கேப்டனுடன் கடும் வாக்குவாதம்.. போட்டிக்கு நடுவே வெளியேறிய அல்சாரி ஜோசப்..!

பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்..?

ஹைப்ரிட் முறையில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்தால், சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்திய அணி வெளியேறும். சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்திய அணி வெளியேறினால், எந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 2025 சாம்பியன் டிராபியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ஒருநாள் உலகக் கோப்பை 2023 புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். ஆனால் இந்த 8 அணிகள் பட்டியலில் இலங்கை அணி இல்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025ல் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா பங்கேற்காத நிலையில், இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இப்போட்டியில் இருந்து இந்திய அணி தற்போது விலகினால், இலங்கை அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 9ஆவது இடத்தில் உள்ளது. இதனால் ஒரு அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டால், புள்ளி பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் அணி அனுமதிக்கப்படும். அதன்படி, சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்திய அணி வெளியேறினால், இலங்கை அணி போட்டிக்கு தகுதி பெறும்.

 

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?