ICC Champion Trophy 2025: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுமா..? அட்டவணை எப்போது வெளியிடப்படும்?
India vs Pakistan: சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக ஐசிசி வாரியம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை மற்றும் இந்தியா பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
2025 சாம்பியன்ஸ் டிராபியை எப்படியாவது நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானமாக உள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததிலிருந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதை ஹைபிரிட் மாடலுக்கு தொடர்ந்து சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்தவது குறித்து அடுத்த 72 மணிநேரத்தில் ஐசிசி முடிவெடுக்கும் என தெரிகிறது.
ஐசிசி கூட்டம்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக ஐசிசி வாரியம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை மற்றும் இந்தியா பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வெளியான தகவலின்படி, ஐசிசி வருகின்ற நவம்பர் 18ம் தேதி கூட்டத்தை கூட்டுகிறது. இந்த கூட்டத்தில் சாம்பியன் டிராபி அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஐசிசி நடத்தும் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைவார்கள். இந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐசிசி வாரியம் கருதுகிறது. இங்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்பான ஒவ்வொரு முடிவும் இறுதி முடிவு எடுக்கப்படும். அதன்படி, சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி முடிவும் எடுக்கப்படும்.
The ICC Champions Trophy reaches Pakistan’s lovely city of Abbottabad. One of the most iconic cities in our country, these locals deserve it 🇵🇰❤️❤️❤️#PakvAus #Ct25 #ChampionsTrophy pic.twitter.com/OzYa4I64XB
— Mohammad Hazran 👨💻 (@KhazranSays_2) November 19, 2024
வரைவு அட்டவணை:
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வரைவு அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என்றும், போட்டிகள் அனைத்தையும் லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஸ்டேடியங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் லாகூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்தது. இருப்பினும், போட்டிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மற்றும் மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்தியா செல்ல மறுப்பது ஏன்..?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசியல் காரணங்களுக்காகவும், கிஸ்தானில் மோசமான பாதுகாப்பு அமைப்பு காரணமாகவும் இந்திய அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இந்திய அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தானில் தற்போது நிலைமை சரியில்லை. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இம்ரான் ஆதரவாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போராட்டங்கள் தணிந்தாலும், இந்த சம்பவத்தினால் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ நடத்த இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிக்கல்களை அதிகரித்துள்ளது. விரைவில் நிலைமை சீரடையவில்லை என்றால், அதன் ஹோஸ்டிங் பாகிஸ்தானிடம் இருந்து பறிக்கப்படலாம்.
ICC Champion Trophy 2025 schedule.
Which team do you support? pic.twitter.com/Qrj29mqJKx— Usman Naeem (@edusepian) November 22, 2024
இந்திய அணி விளையாடும் போட்டிகளையும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றால் வேறு ஒரு நாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. அதன்படி, 2025 சாம்பியன்ஸ் டிராபியின் அனைத்து போட்டிகளையும் சொந்த நாட்டில் நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இந்தநிலையில், ஹைபிரிட் மாடலில் நடத்துவதுதான் நல்லது என ஐசிசி பிசிபியிடம் தெரிவித்து வருகிறது. இதற்கான விடைகள் அனைத்ததும் ஐசிசி நவம்பர் 29ம் தேதி நடத்தும் கூட்டத்தில்தான் முடிவெடுக்கும்.