Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தூக்கிய சீனா.. முதல் பதக்கம் வென்ற நாடு இதுவா..?

Olympics: ஒலிம்பிக் 2024ல் கஜகஸ்தான் முதல் பதக்கத்தை வென்றது. 10 மீட்டர் ரைபிள் கலப்பு பிரிவில் கஜகஸ்தான் அணி 17-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. அதேபோல், ஒலிம்பிக் 2024ல் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ரைபிள் கலப்பு அணியில் கொரிய ஜோடியை வீழ்த்தி சீனா முதல் தங்க பதக்கத்தை வென்றது.

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தூக்கிய சீனா.. முதல் பதக்கம் வென்ற நாடு இதுவா..?

ஹுவாங் யூடிங் - ஷெங் லிஹாவோ (Photo: Mike Egerton/PA Images via Getty Images)

Updated On: 

27 Jul 2024 18:20 PM

ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 இம்முறை ஜூலை 26 (நேற்று) முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சேர்ந்த 117 விளையாட்டு வீரர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கு 157 போட்டிகளும், பெண்களுக்கு 152 போட்டிகளும், கலப்பு அணிகளுக்கு 20 போட்டிகளும் நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் நாளான சனிக்கிழமையின் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஒலிம்பிக் 2024ல் இதுவரை எந்தெந்த நாடு எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது என்பதை அறியலாம்.

Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம்.. உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ்!

சீனா முதல் தங்கம்:

2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கையின்படி, இதுவரை 5 வெவ்வேறு நாடுகள் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் 2024ல் கஜகஸ்தான் முதல் பதக்கத்தை வென்றது. 10 மீட்டர் ரைபிள் கலப்பு பிரிவில் கஜகஸ்தான் அணி 17-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. அதேபோல், ஒலிம்பிக் 2024ல் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் ரைபிள் கலப்பு அணியில் கொரிய ஜோடியை வீழ்த்தி சீனா முதல் தங்க பதக்கத்தை வென்றது. சீனா இதுவரை மொத்தம் 2 பதக்கங்களை வென்றுள்ளது, இரண்டுமே தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான டைவிங்கில் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு நிகழ்வில் சீனா தனது இரண்டாவது தங்கத்தை வென்றது.

10 மீட்டர் ரைபிள் கலப்பு பிரிவில் சீன துப்பாக்கிச் சுடுதல் ஜோடி ஹுவாங் யூடிங் மற்றும் ஷெங் லிஹாவோ ஆகியோர் தகுதிச் சுற்றிலும் முதலிடம் பிடித்தனர். தற்போது, இறுதிப்போட்டியிலும் வென்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினர். ஒலிம்பிக்கில் ஹுவாங் யூட்டிங்கின் இரண்டாவது பதக்கம் இதுவாகும். அதேபோல், 17 வயதான சீன வீரர் ஷெங் லிஹாவோ களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். முன்னதாக இவர், கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். அதே சமயம் தென் கொரியாவின் கியூம் ஜிஹியோன், ஹஜுன் பார்க் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பதக்கங்களை வென்ற நாடுகள்:

சீனா மற்றும் கஜகஸ்தானை தொடர்ந்து அமெரிக்கா, கொரியா குடியரசு மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகியவை தலா ஒரு பதக்கத்தை வென்றுள்ளன. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு போட்டியில் கொரியா வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு போட்டியில் அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தையும், அதே போட்டியில் பிரிட்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

Also read: Shreyasi Singh: பாரிஸ் ஒலிம்பிக்கில் பீகார் எம்எல்ஏ ஸ்ரேயாசி சிங்.. என்னது! இவரும் போட்டியாளரா..?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!