5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Commonwealth Games 2026: இந்தியாவுக்கு பெரும் அடி! காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம்..!

Glasgow 2026: இந்திய வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு காமன்வெல்த் விளையாட்டு ஆணையத்துடன், இந்திய விளையாட்டு அமைச்சகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுகள் சேர்க்கப்படாவிட்டால் 2026 காமன்வெல்த் போட்டியை இந்திய அணி புறக்கணிக்கலாம்.

Commonwealth Games 2026: இந்தியாவுக்கு பெரும் அடி! காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம்..!
காமன்வெல்த் (Image:PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 22 Oct 2024 15:33 PM

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026 ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை ஆஸ்திரேலியா நடந்த இருந்தது. ஆனால், பட்ஜெட் தொடர்பான பிரச்சனை காரணமாக, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் இருந்து விலகியது. இதனை தொடர்ந்து, 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் எங்கு நடைபெறவுள்ளது என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இப்போது கிளாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: IPL 2025 Retention: இன்னும் பதிலை சொல்லாத தோனி! அடுத்த சீசனில் விளையாடுவாரா? ஓய்வு பெறுவாரா?

13 போட்டிகள் இனி இல்லை:

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெற உள்ளன. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம் உட்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்றிருந்தது.

இந்தநிலையில், 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்று 12 விளையாட்டுகளில், 6 விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டைவிங், பீச் வாலிபால், சாலை சைக்கிள் ஓட்டுதல், மவுண்டன் பைக்கிங், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி செவன்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பாரா டேபிள் டென்னிஸ், டிரையத்லான் மற்றும் பாரா டிரையத்லான் ஆகியவை கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இல்லை.

கடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி மல்யுத்தத்தில் 12 பதக்கங்களும், குத்துச்சண்டை மற்றும் டேபிள் டென்னிஸில் தலா ஏழு, பேட்மிண்டனில் ஆறு, ஹாக்கி மற்றும் ஸ்குவாஷில் தலா இரண்டு மற்றும் கிரிக்கெட்டில் ஒன்று என மொத்தம் 31 பதக்கங்களை நீக்கப்பட்ட விளையாட்டுகளில் இருந்து வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைமை செயல் அதிகாரி கேட்டி சாட்லீர் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்த காமன்வெல்த் விளையாட்டு இயக்கத்தின் சார்பாக, 2026 காமன்வெல்த் விளையாட்டுகள் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கலாச்சாரத்திம் கொண்டாட்டம் பல விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பன்முகத்தன்மை கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சகம் பேச்சுவார்த்தை:

இந்திய வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு காமன்வெல்த் விளையாட்டு ஆணையத்துடன், இந்திய விளையாட்டு அமைச்சகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுகள் சேர்க்கப்படாவிட்டால் 2026 காமன்வெல்த் போட்டியை இந்திய அணி புறக்கணிக்கலாம்.

காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 63 தங்கம் உட்பட 135 பதக்கங்களை வென்றுள்ளது. அதேபோல், மல்யுத்தத்தில் 114 பதக்கங்களும், பேட்மிண்டனில் 10 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் உள்பட 31 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதுபோன்ற விளையாட்டுகளை காமன்வெல்த் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டால் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை பாதிக்கப்படும்.

சில விளையாட்டுகள் சேர்ப்பு:

ஒருபுறம் பல விளையாட்டுகள் நீக்கப்பட்டாலும், சில விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இம்முறை தடகளம், பாரா தடகளம், குத்துச்சண்டை, நீச்சல், பாரா நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் ஓட்டுதல், பாரா டிராக் சைக்கிள் ஓட்டுதல், நெட் பால், பளு தூக்குதல் மற்றும் பவர் லிஃப்டிங், ஜூடோ, கூடைப்பந்து மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து போன்ற நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ALSO READ: Watch Video: காற்றில் பறந்து கேட்ச்.. சூப்பர்மேனாக மாறிய ஆயுஷ் பதோனி.. வைரலாகும் வீடியோ!

ஹாக்கி மற்றும் துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்ட காரணம் என்ன..?

2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்கள் ஹாக்கி உலகக் கோப்பை ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளது. இந்த ஹாக்கி உலகக் கோப்பை வாவ்ரே, பெல்ஜியம் மற்றும் ஆம்ஸ்டெல்வீன் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதை கருத்தில்கொண்டு காமல்வெல்த்தில் இருந்து ஹாக்கியை நீக்க முடிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி ஆண்கள் அணி மூன்று முறை வெள்ளிப் பதக்கமும், இரண்டு முறை வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது. அதேசமயம் பெண்கள் அணி ஒரு தங்கப் பதக்கம் உட்பட மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.

2026 காமன்வெல்த் போட்டிகளை நடக்கவிருக்கும் கிளாஸ்கோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஷூட்டிங் ரேஞ்ச் உள்ளதால், துப்பாக்கி சுடுதல் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest News