5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தொடரும் மும்பை அணியின் தோல்வி.. மும்பை அணியின் நிலைக்கு என்ன காரணம்..!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடரும் மும்பை அணியின் தோல்வி.. மும்பை அணியின் நிலைக்கு என்ன காரணம்..!
intern
Tamil TV9 | Updated On: 12 Nov 2024 16:04 PM

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பிற்பகல் 3.30 அணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது.

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாறியது. பின்னர் சிறப்பாக அமையவில்லை. கலீல் அகமது வீசிய 4ஆவது ஓவரில் 8 ரன்களுக்கு அவுட்டானார் ரோகித் சர்மா. அதற்கு அடுத்த ஓவரில் இஷாந்த் கிஷனும் 20 ரன்களுக்கு விக்கெட். அதற்கடுத்த ஓவரில் சூர்ய குமார் யாதவ் 26 என அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை 10 ஓவர்கள் முடிவில் 115 ரன்களைச் சேர்த்தது. ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் தன் பங்குக்கு 20 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 26 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 3 சிக்சர்களை விளாசி 46 ரன்களைச் சேர்த்த ஹர்திக் 13ஆவது ஓவரில் அவுட்டாக, அடுத்து வந்த நேஹல் வதேரா அதே ஓவரில் 4 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகளை தாராளமாக தாரை வார்த்ததால் மும்பையால் இலக்கை எட்டுவதில் சுணக்கம் நிலவியது. ஆனால் திலக் வர்மா நிலைத்து ஆடிக்கொண்டிருக்க, டிம் டேவிட் 37 ரன்களில் எல்பிடபள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நபி 7 ரன்களில் கிளம்பினார்.

இறுதிவரை போராடி நம்பிக்கை அளித்து 63 ரன்களைச் சேர்த்த திலக் வர்மா கடைசி ஓவரில் ரன் அவுட்டானதும் ஆட்டம் டெல்லி கைக்குச் சென்றுவிட்டது. இறுதிப் பந்தில் பியூஸ் சாவ்லா அவுட்டாக, 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கொண்டது.

மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை அணி இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது, மும்பை ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணியின் தற்போதைய நிலை மிகவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் மும்பை அணியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பங்கள் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மும்பை அணிக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் மட்டுமே மும்பை அணி இந்த தோல்விகளை சந்தித்து வருகிறது. ஹர்திக் பாண்டியவிற்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் அணியில் உள்ள சில வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறார். அணியில் உள்ள மற்ற வீரர்களும் சரியாக விளையாடமல் இருப்பதும் தொடர் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. சூர்யகுமார் யாதவின் சமீபத்திய பேட்டிங் சரிவர இல்லாததும் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

Latest News