Wiaan Mulder: வங்கதேசத்தை ஓடவிட்ட தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டர் யார் தெரியுமா? - Tamil News | Cricket fans searching about south africa cricketer wiaan mulder | TV9 Tamil

Wiaan Mulder: வங்கதேசத்தை ஓடவிட்ட தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டர் யார் தெரியுமா?

Published: 

21 Oct 2024 14:55 PM

SA vs BAN: 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் பிறந்த வியான் முல்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி விளையாடி வருகிறார். வங்கதேச அணிக்கெதிரான டாகாவில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வீரரான வியான் முல்டர் 8 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

1 / 6வங்கதேச

வங்கதேச அணிக்கெதிரான டாகாவில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வீரரான வியான் முல்டர் 8 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து யார் அந்த வியான் முல்டர் என பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

2 / 6

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் பிறந்த வியான் முல்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

3 / 6

13 வயதில் இருந்து கிரிக்கெட்டை உயிர் மூச்சாக கொண்டு விளையாடி வரும் வியான் முல்டர் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது முதல்-தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இப்போட்டியில் அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4 / 6

18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அவர், 2022 ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அப்போட்டியில் அவர் 235 ரன்களுடன் அடித்தார்.

5 / 6

ஒருநாள் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராகவும், டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியிலும் வியான் முல்டர் அறிமுகமானார்.

6 / 6

வியான் முல்டர் டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 12 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 8 விக்கெட்டுகளையும் இதுவரை வீழ்த்தியுள்ளார். அணியில் சேர்க்கப்பட்டாலும் போட்டியின் ஆடும் லெவன் அணியில் இவர் பெரும்பாலும் சேர்க்கப்படாமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?