5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cricket Year Ender: 45 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு ஒருநாள் போட்டிகளில் கிடைக்காத வெற்றி.. இந்திய அணி மோசமான சாதனை!

Indian Cricket Team: கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆண்டு கேப்டன்சியில் மோசமான சாதனையை படைத்தார். அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ், இந்திய அணி 2024 இல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாத தேவையற்ற சாதனையை செய்தது.

Cricket Year Ender: 45 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு ஒருநாள் போட்டிகளில் கிடைக்காத வெற்றி.. இந்திய அணி மோசமான சாதனை!
இலங்கை – இந்தியா (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 16 Dec 2024 08:00 AM

2024ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்ற தாழ்வுகளாகவே இருந்தது. அதாவது, இந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்திருந்தாலும், வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரையும் இழந்து மோசமான சாதனையையும் பெற்றது. மேலும், இதுபோதாதென்று இந்திய அணி 2024ல் ஒருநாள் போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. இதன்மூலம், 1979க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகவும் அமைந்தது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த 1974 முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆரம்ப காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் வடிவத்தில் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் கடந்த 1974, 1976 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் இந்திய அணி ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும், அதன்பிறகு இந்திய அணி 1975 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் வென்றது. தொடர்ந்து, 1978ம் ஆண்டு பாகிஸ்தான் அணியையும் ஒருநாள் போட்டியில் தோற்கடித்தது.

வெற்றிப் பயணம்:

ஒருநாள் போட்டிகளில் கடந்த 1980ம் ஆண்டு தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து. அதாவது, இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டிகளிலாவது வெற்றி பெறும். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த தொடர் ஒருநாள் வெற்றி இந்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டில் நின்று போனது. இருப்பினும், இந்த ஆண்டு இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுடன்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியது. தொடரின் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 2024ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்ற சாதனையை இந்திய அணி பெற்றது.

ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவுக்கு வந்து, டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்வாஷ் செய்தது. இந்த நியூசிலாந்து அணியும் இந்த ஆண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இந்த ஆண்டு குறைந்த ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணிகளாக அயர்லாந்து, ஜிம்பாப்பே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இந்தியாவிற்கு பிறகு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதன்படி, 2024ம் ஆண்டு அயர்லாந்து அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒன்றிலும், ஜிம்பாப்வே 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை:

கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆண்டு கேப்டன்சியில் மோசமான சாதனையை படைத்தார். அதுவும் ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ், இந்திய அணி 2024 இல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாத தேவையற்ற சாதனையை செய்தது மட்டுமல்லாமல், இதே ஆண்டில் நியூசிலாந்திற்கு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் இழந்தது. நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக கிளீன் ஸ்வீப் செய்தது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Latest News