IPL 2025 Retention: இன்னும் பதிலை சொல்லாத தோனி! அடுத்த சீசனில் விளையாடுவாரா? ஓய்வு பெறுவாரா?
MS Dhoni: கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே, எம்.எஸ்.தோனி வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவேன் என்று அறிவித்தால், ஏலத்திற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எம்.எஸ் தோனியை அன் கேப்டு வீரராக தக்க வைத்து கொள்ளலாம்.
ஐபிஎல் 2025 சீசனில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். பெரும்பாலான வீரர்கள் இந்த பட்டியலை தயாரித்துவிட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தோனியின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ்.தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை தெரியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் 2025ல் எம்.எஸ். தோனி விளையாட முடிவு செய்தால், சென்னை சூப்பர் அணி தோனியை அன்கேப்டு வீரராக தக்க வைத்து கொள்ளும். தோனியின் முடிவு இன்னும் தெரியாததால், அவர் தக்கவைக்கப்படுவாரா என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்னும் முடிவு செய்யவில்லை.
ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!
தோனியின் தக்கவைப்பு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, சென்னை ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து ESPNcricinfo இடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “ தோனியிடம் இருந்து இப்போது வரை நாங்கள் எந்தவொரு உறுதியான தகவலும் வரவில்லை. இருப்பினும், தோனி எங்களுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வருகின்ற 31ம் தேதிக்கு முன் தோனியின் உறுதிப்படுத்தல் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
மாற்றப்பட்ட விதிகள்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியான ஒன்று, ஐந்து வருடஙக்ள் அல்லது அதற்கு முன்பே சர்வதேச போட்டிகளில் விளையாடி அல்லது ஓய்வு பெற்ற வீரர்கள் அன் கேப்டு வீரர்களாக அழைக்கப்படுவார்கள். எம்.எஸ்.தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே, எம்.எஸ்.தோனி வருகின்ற ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவேன் என்று அறிவித்தால், ஏலத்திற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எம்.எஸ் தோனியை அன் கேப்டு வீரராக தக்க வைத்து கொள்ளலாம்.
ஒருவேளை தோனி ஒரு அன் கேப்டு வீரராக ரூ. 4 கோடியை சம்பளமாக பெற தயாராக இல்லை என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் ஏலத்தில் எடுக்கலாம். தோனி இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி தனது உடற்தகுதிக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருவதால், இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று நம்பலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறது. கடந்த 2016, 2017ம் ஆண்டு மட்டும் எம்.எஸ்.தோனி ஐபிஎல்லில் ரைசிங் சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கினார். அந்த இரண்டு ஆண்டுகள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடை விதிக்கப்பட்டது.
ALSO READ: IPL 2025: ரிஷப் பண்ட் வேண்டாம்! புதிய கேப்டனை தேடும் டெல்லி கேபிடல்ஸ்.. என்ன காரணம்..?
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல மும்பை இந்தியன்ஸ் மட்டுமே 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் 2025க்கான ஏலம் வருகின்ற நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என்றும், இந்த முறை ஏலம் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை இறுதி செய்யும் பணியில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்திற்கு முன், 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கப்பட்ட, விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதன் பின்னரே எதிர்வரும் ஏலத்திற்கான புதிய வீரர்களின் தேர்வு நடைபெறும்.