RCB: ஆர்சிபி அணியின் தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்.. காரணம் என்ன?
IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில், எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணி தோல்வியை தழுவி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஆர்சிபி அணியின் தோல்வியை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே ரசிகர்கள்இணையத்தில் மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு கோலாகலமாக தொடங்கப்பட்டு, நாளுக்கு நாள் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. லீக் தொடர்கள் ஒரு வழியாக முடிவுபெற்று நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
சிஎஸ்கே தோல்வி
சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆர்சிபி அணி 27 ரன்களில் சென்னை அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. ஒரு புறம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், 16 வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும் என்று மட்டுமே நினைத்தனர். இந்த போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் சிஎஸ்கே அணி ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுறுக்கு செல்லாமல் வெளியேறியது.
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் மற்றும் இல்லாமல், ஆர்சிபி வீரர்களும் ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்றது போல், கொண்டாடி தீர்த்தனர். அதுமட்டுமில்லாமல், மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து விராட் கைவிரலைக் காட்டி அமைதிப்படுத்தினார். இந்த செய்கை இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதை ஆரவாரமாக கொண்டாடினர். இறுதியில் போட்டி முடிந்த எதிரணி வீரர்களுக்கு மரியாதை நிமித்தமாக கைகுலுக்கும் நிகழ்விற்கு கூட வராமல், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடியது சிஎஸ்கே வீரர்களுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்
சிஎச்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றிபெற்றதை கொண்டாடிய ரசிகர்கள், மைதானத்திற்குள்ளும், வெளியேயும், சிஎஸ்கே ரசிகர்களை டி-ஷர்டை கழட்ட சொல்லியும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இணையத்திலும், பலவிதமான மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் பெங்களூரு மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களிடம் எல்லை மீறியுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வெளிவந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு தரப்பு ரசிகர்களும், ஆர்சிபி அணி இறுதிபோட்டிக்கு சென்று, கோப்பையை கைப்பற்றவில்லை என்றால் அதன் பிறகு இருக்கிறது என்று கூறிவந்தனர்.
எலிமினேட்டரில் ஆர்சிபி தோல்வி
நேற்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான். எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் வென்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் தற்போது வரை மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்களை கேலி செய்யும் விதமாக சிஎஸ்கே ரசிகர்களும், சிஎஸ்கே அணியை லீக் தொடரில் வீழ்த்தியதே கோப்பையை வென்றது போல் தான் என ஆர்சிபி ரசிகர்களும் மீம்ஸ் மோதலில் ஈடுபட்டனர். இன்ஸ்டகிராம் ஆப்பிற்கு சென்றால் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மீம்ஸ்களாகவே Feed ஆகிறது என்று இணைய வாசிகள் கூறுகின்றனர்.
சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்
சமூக வலைதளங்களான இன்ஸ்டகிராம், வாட்ஸ் அப், எக்ஸ், ஃபேஸ்புக் என அனைத்திலும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி அணியின் மோசமான தோல்வியை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். கொஞ்சம் நஞ்சம் ஆட்டமா போட்டீங்க, மரண பயத்த காட்டிடாங்க பரமா என்பது வரை பலவிதமான மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.