CSK Retention List IPL 2025: ரச்சின், கான்வே அவுட்.. முக்கிய வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்..! - Tamil News | CSK IPL 2025 Retention, chennai super kings may target these Players for IPL Retention, know details in tamil | TV9 Tamil

CSK Retention List IPL 2025: ரச்சின், கான்வே அவுட்.. முக்கிய வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Published: 

31 Oct 2024 19:51 PM

IPL Retention 2025: ஐபிஎல் 2025க்கான தக்கவைப்பு பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மதிஷா பத்திரனா, சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில், ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்துள்ளது.

1 / 6ஐபிஎல்

ஐபிஎல் 2025க்கான தக்கவைப்பு பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அடுத்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவாரா இல்லையா என்பதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.

2 / 6

ஐபிஎல் 2025க்கான தக்கவைப்பு பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மதிஷா பத்திரனா, சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில், ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்துள்ளது.

3 / 6

சென்னை ரசிகர்களுக்காக தோனி மற்றொரு சீசனில் விளையாட இருக்கிறார். ஐபிஎல்லில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுக்கு மேல் ஓய்வு பெற்ற வீரர் அன் கேப்டு வீரராக தக்க வைத்து கொள்ளலாம். இந்த விதியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சென்னை, தோனியை வெறும் 4 கோடிக்கு தக்க வைத்து கொண்டது.

4 / 6

சென்னை அணி ஐந்து வீரர்களுக்காக மொத்தம் ரூ.65 கோடியை செலவு செய்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அதிகபட்சமாக தலா ரூ.18 கோடிக்கும், மதிஷா பதிரனா ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர். முன்னாள் கேப்டன் தோனி ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

5 / 6

அதன்படி, அடுத்த மாதம் நடைபெறும் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 55 கோடியுடன் களமிறங்குகிறது. இதையடுத்து, வருகின்ற மெகா ஏலத்தில் சென்னை எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கும், ரைட் டு மேட்ச் அடிப்படையில் எந்த வீரரை மீண்டும் அணிக்கு கொண்டு வரும் என்று ஆர்வம் அதிகமாக உள்ளது.

6 / 6

சென்னை விடுவித்த வீரர்கள் பட்டியல்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மொயீன் அலி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மிட்செல் சான்ட்னர், அஜிங்க்யா ரஹானே, மகேஷ் தீக்ஷனா, ஷர்துல் தாக்கூர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன், அவ்னிஷ் ராவ் ஆரவலி, ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, மிட்செல்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!