David Warner Birthday: வாழ்நாள் தடை.. 4 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் வார்னரின் ஏற்றத்தாழ்வுகள்!
David Warner: 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இடம் பெற்றிருந்தார். இதற்கு பிறகு, 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஒரு அங்கம் வகித்தார். மேலும், அந்த டி20 உலகக் கோப்பையில் வார்னர் ‘போட்டியின் ஆட்டநாயகன்’ விருதையும் வென்றார்.
ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அக்டோபர் 27ம் தேதியான இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வார்னருக்கு என்று எந்த அறிமுகமும் தேவையில்லை. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அறிமுகமான கதை சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமின்றி, வார்னரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றதாழ்வுகளை பற்றியும் இங்கே தெரிந்துகொள்வோம். வார்னர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 4 ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். அந்தவகையில், டேவிட் வார்னரின் அறிமுகம், கிரிக்கெட் வாழ்க்கை, வாழ்நாள் தடை உள்ளிட்ட சில தகவல்களை பார்ப்போம்.
ALSO READ: IND vs NZ: 12 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணி.. நியூசிலாந்து அபாரம்!
சர்வதேச அறிமுகம்:
கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் எந்தவொரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் டேவிட் வார்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டிகளில் தனது முதல் இன்னிங்ஸின்போது 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்து தன்னை நிரூபித்தார். இதன்மூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நீண்ட வரலாற்றில் முதல் தர போட்டியில் விளையாடாமல் தேசிய அணியில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். அப்போது, வார்னர் பேட் சுழல் தொடங்கி, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய அங்கமாகி விட்டார்.
Happy Birthday David Warner
8786 Test Runs with 27 100s
6932 Odi Runs with 22 100s
3278 T20i Runs with 1 100
Most 100s in Odi WCs by an Australian:6
His fielding in 23 WC Finals the best I have seen
Also his 123 vs Ind 2017 Chinnaswamy
Thanks for winning us the 2016 IPL pic.twitter.com/zdeA8djEMK— Sashank (@sas_3343) October 26, 2024
கடந்த 2011ம் ஆண்டு டேவிட் வார்னர் தனது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். பிரிஸ்பேனில் நடந்த தனது முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று மற்றும் 12 ரன்களில் அவுட்டானார். அதன்பின், ஹோபார்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் குவித்தார். எனினும், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
நான்கு ஐசிசி கோப்பை:
2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இடம் பெற்றிருந்தார். இதற்கு பிறகு, 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஒரு அங்கம் வகித்தார். மேலும், அந்த டி20 உலகக் கோப்பையில் வார்னர் ‘போட்டியின் ஆட்டநாயகன்’ விருதையும் வென்றார்.
தொடர்ந்து, கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார். அந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றார். இது தவிர, 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை குவித்திருந்தார்.
2018ல் வாழ்நாள் தடை:
கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் உப்பு காகிதத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்த முயற்சி செய்தது கேமராவில் கண்டறியப்பட்டது. இது கிரிக்கெட் வரலாற்றிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் மோசமான இமேஜை கொடுத்தது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில், கேமரூன் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எந்தவொரு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் கேப்டனாக செயல்படக்கூடாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவிட்டது. தற்போது, 6 ஆண்டுகளுக்கு பிறகு வார்னர் மீதான தடை நீக்கப்பட்டது.
வார்னரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
டேவிட் வார்னர் தனது சர்வதேச வாழ்க்கையில் 112 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 110 டி20 சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அந்தவகையில், 112 டெஸ்ட் போட்டிகளில் 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்களும், 110 டி20 போட்டிகளில் 3277 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் வார்னர் 22 சதங்களும், 22 அரை சதங்களும் அடித்துள்ளார்.