5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dhoni : தோனியை பார்த்தே ஆகணும்.. கூடாரம் போட்டு தங்கிய டெல்லி இளைஞர்.. சென்னையில் பரபர!

CSK Fan Boy : தோனியை பார்ப்பதற்காக 23 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து டெல்லியில் இருந்து சென்னை வந்து கூடாரம் அமைத்து தங்கிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது

Dhoni : தோனியை பார்த்தே ஆகணும்.. கூடாரம் போட்டு தங்கிய டெல்லி இளைஞர்.. சென்னையில் பரபர!
தோனி
tamil-tv9
Tamil TV9 | Published: 14 May 2024 12:51 PM

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் கடவுள் என்றால் கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் மகேந்திர சிங் தோனி தான். இந்திய அணியின் கேப்டனாக அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன போதும் அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு குறையவே இல்லை.கடந்த 2 ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங்கை பார்க்க தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் போட்டியை காண மைதானத்திற்கு செல்கிறது. அவர் ரன் அடிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் ரசிகர்களுக்கு இல்லை அவர் மைதானத்தில் இறங்கினால் மட்டும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். சென்னை மட்டுமல்ல எந்த இடத்தில் போட்டி நடந்தாலும் தோனிக்கான வரவேற்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

தோனி மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடாக ரசிகர் ஒருவர் தோனியை பார்ப்பதற்காக 23 நாட்கள் சைக்கிளில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

Also Read : சிஎஸ்கே அணியின் வெற்றி கொண்டாடத்தில் சுரேஷ் ரெய்னா.. தொடரும் தல, சின்ன தல நட்பு..!

பீகார் மாநிலத்தை சேர்ந்த கெளரவ் என்ற ரசிகர் தோனியைபார்ப்பதற்காக டெல்லியில் சைக்கிளில் 23 நாட்கள் பயணம் செய்து சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின்போது
வந்த கெளரவ் தோனியை பார்த்துவிட்டு தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து தங்கிவிட்டார்.

இதனால் சேப்பாக்கம் மைதானம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த காவல்துறையினர் இளைஞர் கெளரவிற்கு அறிவுரை கூறியதை அடுத்து தன்னுடைய கூடாரத்தை கலைத்துவிட்டு தோனியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றார் கெளரவ்

Latest News