Dhoni Retirement: ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்த தோனி..! சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன அதிர்ச்சி தகவல்

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா அல்லது ஓய்வு பெறுகிறேனா என்பது குறித்து சில மாதங்களுக்கு பின் முடிவெடுத்து தெரிவிப்பதாக தோனி சிஎஸ்கே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhoni Retirement: ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்த தோனி..! சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன அதிர்ச்சி தகவல்

மகேந்திரசிங் தோனி

Updated On: 

27 Sep 2024 10:25 AM

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி நடப்பு சீசனில் கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படத்தார். இந்த சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்ட தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தோனி ஒரு நிகழ்ச்சியில் தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று கூறினார். அதனை தொடர்ந்து சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியின் போதும் தோனிக்கு இது தான் கடைசி போட்டி என்று கூறப்பட்டது. இறுதிப்போட்டி சென்னையில் தான் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இம்முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று தோனியை வழியனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை அணியின் வீரர்கள் தொடர்ந்து காயத்தால் அவதியுற்றதால், பல போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

Also Read : IPL 2024 : RCB வென்றது எப்படி? CSK குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்!

பெங்களூரு அணியுடன் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவிய நிலையில், அந்த போட்டி தான் தோனியின் கடைசி போட்டி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது போல், ப்ளே ஆப் சுற்றிலும் ஆர்சிபி அணியை வீழ்த்தி வென்றுவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த போட்டி ஏமாற்றத்தை அளித்தது. மேலும், சிஎஸ்கே அணியின் இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்து வருகின்றன. ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்ற சிஎஸ்கே அணி 6 வது முறையாக கோப்பையை கைப்பற்றும் கனவில் இந்த சீசனை எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரகளாக இருந்த கான்வே ஆரம்பம் முதலே காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. மேலும், பத்திரனா, தீபக் சாஹர் போன்ற பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடமுடியாமல் போனது.

Also Read: KKR vs RR: மழையால் கைவிடப்பட்ட RR vs KKR போட்டி.. ரசிகர்கள் ஏமாற்றம்…!

தோனிக்கும் கால், முதுகு பிரச்சினையால் 4 அல்லது 5 -ல் களமிறங்காமல் பந்துவீச்சாளர்களுக்கு அடுத்த படியாக விளையாடினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரன் எடுக்க முடியாமல் அவதியுற்றார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர் அடிப்பதில் கவனம் செலுத்தினார். அறுவைசிகிச்சைக்கு பிறகு விளையாடி வரும் தோனி இந்த சீசனில் முதுகுவலியால் அவதியுற்றதை காணமுடிந்தது. மேலும், ஒரு சீசன் விளையாடுங்கள் தோனி என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகத்தினர் கூறும்போது, தோனி இதுவரையிலும், ஓய்வு குறித்த எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஓய்வு முடிவை ஒருசில மாதங்கள் கழித்து யோசித்து கூற தோனி தெரிவிப்பார் என்று கூறியுள்ளனர். மேலும், நல்ல உடல்நிலையுடன் தோனி இருந்தால் இன்னும் ஒரு சீசன் கண்டிப்பாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளனர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!