Happy Birthday Dipika Pallikal: ஸ்குவாஷ் தரவரிசையில் டாப் 10.. ஜிம்மில் தினேஷ் கார்த்திக்குடன் காதல்.. தீபிகா பள்ளிக்கல் கடந்து வந்த பாதை!
Dipika Pallikal: 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் இரட்டையர் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து தீபிகா பள்ளிக்கல் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்திய வரலாற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக ஸ்குவாஷில் பதக்கம் கிடைத்தது. அதனை தொடர்ந்து, தெற்காசிய விளையாட்டு மற்றும் ஆசிய அணி சாம்பியன்ஷிப்பில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். கடைசியாக தீபிகா பள்ளிக்கல் 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக இரட்டையர் சாம்பியன்ஷிப் தங்கமும், அதே ஆண்டு ஆசிய போட்டியில் தங்கமும் வென்றார்.
PSA பெண்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல் இன்று (செப்டம்பர் 21ம் தேதி) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சாதனையை 2012ம் ஆண்டு படைத்த தீபிகா பள்ளிக்கல், இதற்கு முந்தைய ஆண்டிட்ல் மூன்று சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்றிருந்தார். கூடுதலாக, உலக ஓபன் காலிறுதி போட்டி வரையும் சென்றிருந்தார். இதுதான் தீபிகாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்தது. 2012ம் ஆண்டு தனது ஸ்குவாஷ் வாழ்க்கையில் டாப் 10 தரவரிசைக்கு முன்னேறிய அதே ஆண்டில் மத்திய அரசாங்கத்திடமிருந்து ‘அர்ஜூனா விருதை பெற்றார். இந்தநிலையில், யார் இந்த தீபிகா பள்ளிக்கல், அவரது குடும்பம், திருமண வாழ்க்கை உள்ளிட்டவற்றை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!
பிறப்பு மற்றும் குடும்பம்:
கடந்த 1991ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி சென்னையில் உள்ள மலையாளி குடும்பத்துல் பிறந்தவர் தீபிகா ரெபேக்கா பள்ளிக்கல் பிறந்தார். இவரது பெற்றோர் சஞ்சீவ் மற்றும் சூசன் பள்ளிக்கல் ஆவார். தீபிகா பள்ளிகலின் தந்தை ரீச் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியில் மேனேஜராகவும், இவரது தாயார் இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தீபிகா கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்காமல் ஸ்குவாஷை தேர்ந்தெடுத்ததுதான். தீபிகா பள்ளிக்கலுக்கு ஒரு காலத்தில் கிரிக்கெட் என்பது விரும்பாத விளையாட்டாக இருந்தது. ஆனால், கிரிக்கெட் தீபிகாவின் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அங்கமாக மாறிவிட்டது. இவரது கணவர் தினேஷ் கார்த்திக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்குவாஷ்:
2006ம் ஆண்டு தீபிகா பள்ளிகல் ஸ்குவாஷ் விளையாட தொடங்கி, 2011ம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனையாக உருவெடுத்தார். தொடர்ந்து, அதே ஆண்டு தீபிகா பள்ளிக்கல் ஸ்குவாஷ் உச்சத்தை தந்தது. 2011ம் ஆண்டு மட்டும் தீபிகா WISPA பட்டங்களை வென்று உலகத் தரவரிசையில் 17வது மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறி, முதல்முறையாக முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார். அதன்பிறகு, உலக ஓபனில் பங்கேற்று முதல் எட்டு இடங்களுக்குள் வந்து இந்தியாவிற்கு பெறுமை சேர்த்தார். இதற்கு முன்பு வரை உலக ஸ்குவாஷ் பெண்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை எவரும் முதல் 10 இடங்களுக்குள் வந்தது கிடையாது.
நியூயார்க்கில் நடந்த சாம்பியன்ஸ் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்றதன் மூலம், வெள்ளிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய ஓபனை வெல்வதன் மூலம் தங்க பதக்க போட்டியில் அரையிறுதிக்கு வரை முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை தீபிகா படைத்தார்.
2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் இரட்டையர் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து தீபிகா பள்ளிக்கல் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்திய வரலாற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக ஸ்குவாஷில் பதக்கம் கிடைத்தது. அதனை தொடர்ந்து, தெற்காசிய விளையாட்டு மற்றும் ஆசிய அணி சாம்பியன்ஷிப்பில் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். கடைசியாக தீபிகா பள்ளிக்கல் 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக இரட்டையர் சாம்பியன்ஷிப் தங்கமும், அதே ஆண்டு ஆசிய போட்டியில் தங்கமும் வென்றார்.
ALSO READ: Virat Kohli: சாதனையுடன் மோசமான ரெக்கார்டையும் படைத்த கோலி.. குவியும் வாழ்த்துகளும், ஆதரவுகளும்..
தினேஷ் கார்த்திக் உடனான காதல்:
கடந்த 2010ம் ஆண்டு தீபிகா பள்ளிக்கலும் தினேஷ் கார்த்திக்கும் ஜிம்மில் பயிற்சியின்போது முதன்முதலில் சந்தித்தனர். முதல் சந்திப்பில் இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும், இரண்டு பேரும் ஒரே பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றனர். தொடர்ந்து, இருவரும் மெல்ல மெல்ல நல்ல நண்பர்கள் ஆகினர். அப்போதுதான் தினேஷ் கார்த்திக் தனது முதல் மனைவி நிகிதாவிடம் இருந்து 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
தொடர்ந்து, இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் கார்த்திக் தீபிகாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அடுத்த 5 மாதங்களுக்கு பிறகு அதாவது நவம்பர் 15ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தீபிகா – தினேஷ் கார்த்திக் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தீபிகாவின் அம்மா சூசன், அதன்பிறகு கார்த்திக்கை சந்தித்து பேசியதும் ஓகே சொல்லியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் – தீபிகா பள்ளிக்கல் 2015 ஆகஸ்டு 18ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், ஆகஸ்ட் 20ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.