Watch Video: கலவரத்தில் முடிந்த கால்பந்து போட்டி.. மோதிக்கொண்ட ரசிகர்கள்.. இதுவரை 56 பேர் உயிரிழப்பு!
Football Clash: கால்பந்து போட்டிகளுக்கு இடையேயான போட்டி வன்முறையான நிலையில், இந்த கலவரத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிற்து. இந்த வீடியோகளில், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியே உள்ள சாலைகளில் ரசிகர்கள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர்.
ஆப்பிரிக்க நாடான சவுத் கினியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 56 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: WTC Final: எளிதாக இறுதிப்போட்டிக்குள் நுழையப்போகும் இந்தியா.. பயத்தில் பலமிக்க ஆஸ்திரேலியா..!
என்ன நடந்தது..?
கினியாவின் இராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவின் நினைவாக தென் கினியாவின் இரண்டாவது ஞெரகோரில் நாசரேக்கூர் நகரில் லேபே அணிக்கும், நாசரேக்கூர் அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. லெபா மற்றும் ஞெரக்கூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் போது, நடுவரின் முடிவு தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரு அணிகளுக்கிடையே தொடங்கிய தகராறு சிறிது நேரத்தில் ரசிகர்களை எட்டியது, பின்னர் சண்டை தொடங்கியது. இரு தரப்பு ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து, வன்முறையை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலைத்ததாக கூறப்படுகிறது.
🚨#BREAKING: At least 100 people have died due to clashes between two groups of supporters at a football match in Guinea. pic.twitter.com/Wbk34YCyNI
— Abdul khabir jamily (@JamilKhabir396) December 1, 2024
சிறிது நேரத்தில் இந்த மோதல் களத்தில் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தனர். இந்த நெரிசலில் ஏராளமான ரசிகர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்குள்ளான சிறுவர்கள் என்றும், மைனர் ரசிகர்களும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில், மீண்டும் அமைதியான சூழ்நிலையை கொண்டு வர முயற்சி செய்யுமாறு கினியாவின் பிரதமர் பா யோரி நகர அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, முதலில் காயமடைந்தவர்களுக்கு முறையான முதலுதவி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
100’s Killed in Rivalry between Two soccer Team Fans in Guinea #soccer #Guinea@Mrgunsngear pic.twitter.com/GJlImuQsFZ
— The Global South Post (@INdEptHGlobal) December 2, 2024
வன்முறையை நேரில் பார்த்த ஒருவரின் பேட்டி:
போட்டியை நேரில் ஒருவர் கூறுகையில், ” கால்பந்து போட்டிகளுக்கு நடுவே, கள நடுவரின் சர்க்கரைக்குரிய முடிவால் வன்முறை தொடங்கியது. இரு அணிகளுக்கு இடையே வாக்குவாதமாக தொடங்கிய சிறிது நேரத்தி, மைதானத்தில் ரசிகர்கள் புகுந்தனர். அப்போது, இரு அணியின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். இது மிகப்பெரிய கலவரமாக மாறி கற்களை கொண்டும், குச்சிகளை கொண்டும் தாக்கி கொண்டனர்.
ALSO READ: Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?
இதனால், களத்திலேயே பலருக்கு காயமும், உயிர் பலியும் ஏற்பட்டது. மேலும், தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரசிகர்கள் சுவர் மீது ஏறி தாவி குதித்து ஓட்டம் பிடித்தனர்.” என்று தெரிவித்தார்.
Es Passierte wieder
Wir Trauern zu tieftst um die 50+ Toten Fans beim Fusballspiel in #Nzérékore in #Guinea
Nach einer Roten Karte kam es zu Tumulten #Polizei setzte Tränengas im Stadion ein was zu einer Massenpanik fürte.
#SGE #Eintracht #EintrachtFrankfurt #Frankfurt pic.twitter.com/hCnDlb9jDo
— Fanatico Football (@fanatico_japan) December 2, 2024
காவல் நிலையம் எரிப்பு:
கால்பந்து போட்டிகளுக்கு இடையேயான போட்டி வன்முறையான நிலையில், இந்த கலவரத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிற்து. இந்த வீடியோகளில், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியே உள்ள சாலைகளில் ரசிகர்கள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். மேலும், சிலர் சடலமாக சாலைகளில் கிடந்தனர். அதேபோல், கோபமடைந்த ரசிகர்கள் சில N’Zérékor காவல் நிலையத்தையும் நாசப்படுத்தி, தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.